சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என முகநூலில் பதிவு... ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என முகநூலில் பதிவு செய்த நபரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான இது போன்ற பதிவுகள் கடும் கண்டனத்திற்குரியது என அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவிலுக்குள் புகுந்த ஆமை.. அர்ச்சகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. இனி கொரோனா அழிஞ்சுருமாம்! கோவிலுக்குள் புகுந்த ஆமை.. அர்ச்சகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. இனி கொரோனா அழிஞ்சுருமாம்!

விபச்சார விடுதி

விபச்சார விடுதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. 95ஆண்டுகளாக நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடித்தட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நீண்ட நெடிய, பயணத்தில் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், தமிழ்நாட்டுக்குப் பல நன்மைகளைப் பெற்றுத்தந்துள்ளன.

எளிமையான தலைவர்கள்

எளிமையான தலைவர்கள்

இந்திய விடுதலை போராட்டம் முதல் அடித்தட்டு தொழிலாளர்களைப் பாதிக்கும் ஊதிய உயர்வு பிரச்சினைகள் வரை அனைத்து போராட்டங்களிலும் முன்னிலையில் போராடுவதில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களும் முக்கியமானவர்கள். ஜீவானந்தம், ஐயா ஆர். நல்லகண்ணு என பல எளிமையான தலைவர்களை உருவாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை விபச்சார விடுதி என்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் அவரது மகனுடன் உள்ள புகைப்படத்தைப் பதிவு செய்து, அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டமிட்டுப் பதிவு செய்துள்ளார் விஸ்வா.எஸ்

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

எளிமையின் சின்னமாக நம்மிடையே வாழ்ந்து வரும் விடுதலை போராட்ட வீரர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் ஆபாசப்படம் போட்டுச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அமைதியாக உள்ள தமிழகத்தில் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மோதல் போக்கை உருவாக்கி அதில் ஆதாயம் தேடும் சிலரால் இதுபோன்ற பதிவுகளைத் திட்டமிட்டுப் பதியப்பட்டு வருகிறது.

கைது செய்யவில்லை

கைது செய்யவில்லை

இந்த வெறுப்புணர்வை தூண்டும் பதிவு குறித்துக் கடந்த 17.7.2020 அன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து விசாரணை நடத்தாமல் உள்ளது காவல்துறை. காவல்துறையின் இதுபோன்ற அலட்சியப் போக்கைக் கண்டித்தும், ஜனநாயக இயக்கங்களையும், அதன் தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் நபர்களைக் கண்டித்தும் நாளை தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் முக கவசத்துடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
manithaneya makkal katchi president jawahirullah strongly condemn to who wrote as cpi office brothel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X