சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருக்கடியில் பொருளாதாரம்.. "தலையாட்டி பொம்மை" பற்றி சிலாகித்த மோடி .. அனல்பறக்க கிளம்பிய சர்ச்சை

மக்களுக்கு இப்போதைய தேவை செயல்பாடுகள்தான். தலையாட்டி பொம்மை குறித்த பாராட்டு அல்ல

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றி பிரதமர் ஏன் பேசினார்? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, மான் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்... இதில் விவசாயம் உள்ளிட்ட நாட்டுக்கு அவசியமான, உத்வேகம் நிறைந்த கருத்துக்களை எடுத்து வைத்து வருகிறார்.

குறிப்பாக தமிழக மக்களின் சிறப்பையும் இந்த மன்கிபாத் மூலம்தான் பிரதமர் பாராட்டுவார்.. உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது முதல், மகளின் கல்யாண செலவிற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா தடுப்புக்காக வழங்கிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் வரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்... இதை மறுப்பதற்கில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை.. இன்று அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை.. இன்று அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

 நீட் தேர்வு

நீட் தேர்வு

ஆனால் நாடு இப்போது நார்மலாக இல்லை.. நிறைய பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன.. இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.. யார் கையிலும் காசு இல்லை... மாநில அரசு கேட்ட எந்த நிதியையும் போதுமான அளவு மத்திய அரசு ஒதுக்கவும் இல்லை.. நீட் தேர்வுக்கு 7 மாநிலங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளன.. புதிய கல்விக்கொள்கை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்று தெரியவில்லை.. மும்மொழி கொள்கை விவகாரம் எங்கே போய் முடியுமோ அதுவும் தெரியவில்லை.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இவ்வளவையும் விட்டுவிட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பற்றின பேச்சை பிரதமர் நேற்று ரேடியோவில் பேசியுள்ளார்.. "பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது... விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும்... பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது... இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 பொருளாதாரம்

பொருளாதாரம்

நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவிக்க பிரதமர் இப்படி பேசினார் என்றாலும், அதற்கான நேரம் இது கிடையாது.. தஞ்சாவூரில் பல வருஷமாகவே பொம்மைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. பொம்மைகளை கணிணிமயமாக்குவதால் மட்டும், வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்படாது என்பதே உண்மை.

தேர்வுகள்

தேர்வுகள்

நட்டின் பொருளாதாரத்தை ஒரு பிரதமர் உணர்ந்திருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தையும் நேற்றைய பேச்சு கிளப்பி விட்டுள்ளது.. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பேச்சு மட்டுமே இப்போதைக்கு தேவை.. குறைந்தபட்சம், ஜேஇஇ - நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றியோ, அல்லது அந்த தேர்வு குறித்தோ தெரிவித்திருக்கலாம்.

தற்கொலை

தற்கொலை

அந்த குழந்தைகள் எப்படி தேர்வு எழுதுவது என்று பீதியில் உறைந்து கிடக்கிறார்கள்.. தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்களோ என்று பயந்து கொண்டு கோவையில் ஒரு நீட் தேர்வுக்கு தயாரான சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு இறந்தே விட்டார்.. இப்படிப்பட்ட சூழலில் குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ள பிள்ளைகளுக்கு தைரியம் சொல்லியாவது பேசியிருக்கலாம்.. அல்லது அவர்களுடன் விவாதித்து, உங்களுக்கு எல்லாம் என்னதான் பிரச்சனை என்றாவது கேட்டிருக்கலாம்.

 துணை நிற்பேன்

துணை நிற்பேன்

"கொரோனா தொற்றும், பல இடங்களில் கடுமையான வெள்ளத்தின் தாக்கத்தை லட்சக்கணக்கானோர் அனுபவித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள மாணவர்கள் தேசிய தேர்வுகளில் எழுத கேட்டுக் கொள்ளப்படுவது நியாயமல்ல, அந்த தேர்வை தள்ளி வைக்கக் கோரும் அவர்களுக்கு நான் துணை நிற்பேன்" என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் 16 வயசு சிறுமி கிரேட்டா குரல் கொடுக்கிறார் என்றால் இதைவிட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்?

நாய்கள்

நாய்கள்

ராஜபாளையம் நாய்கள் பற்றின பேச்சுகூட இப்போது எதற்கு? உயர்தர நாய்களைவிட, நாட்டு நாய்களை வளர்க்க தமிழக மக்கள் எப்போதோ விழித்து கொண்டனர்.. "நாங்க ஆட்சிக்கு வந்தா வருஷம் ரெண்டு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னவர், 150 லட்சம் கோடி கருப்பு பணம் கிடைக்கும்னு என்று சொன்னவர்.. 15 லட்சம் ஒவ்வொருவர் அக்கவுண்ட்டிலும் போடுவதாக சொன்னவர்.. அதை பத்தியும் சற்று பேசியிருக்கலாம் என்பதுதான் நமது குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.

எப்போதுமே ஆக்கப்பூர்வமான ஒரு பேச்சையே ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் இருந்து நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. மக்களுக்கு இப்போதைய தேவை வாழ்வாதாரமும், செயல்பாடுகளும்தான்!

English summary
pm modi speech fails to attract people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X