• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே!

|
  Prakash Raj Vs Mansoor Ali Khan: பெரிதாக பேசிய பிரகாஷ் ராஜ்... கலக்கிய மன்சூர் அலிகான்- வீடியோ

  சென்னை: இரு நடிகர்கள் செய்த பிரச்சாரமும், அவர்கள் வாங்கிய வாக்குகளும் பல சிந்தனைகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. பிரகாஷ் ராஜ், மன்சூர் அலிகான் இவர்களைப் பற்றித்தான் சொல்கிறோம்.

  கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்தவர். தமிழில் இவர் நடித்த வேடங்கள் இந்திய அளவில் இவருக்கென்று பெயரைப் பெற்றுத் தந்தது. இருவர் படத்திற்காக தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது.

  மறுபக்கம் நடிகர் மன்சூர் அலிகான். டான்ஸராக, வில்லனாக, காமெடியனாக கலக்கியவர் இவர். படு எதார்த்தமானவர். கோபம் வந்தால் வெளிப்படையாக காட்டுவார். தேர்தல் களத்தில் இந்த இரு நடிகர்களும் கலக்கினர்.

  தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்! தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்!

  மன்சூர் - பிரகாஷ்

  மன்சூர் - பிரகாஷ்

  இவர்கள் இருவரையும் ஏன் ஒப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். உண்மைதான். ஆனால் இவர்கள் இருவரும் பெற்ற வாக்குகள் நம்மை சிந்திக்க வைக்கிறது. பிரகாஷ் ராஜ் அகில இந்திய அளவில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டவர். ஆனால் மன்சூர் அப்படி இல்லை. தமிழக அளவில்தான் அவருக்கான பிரபலம் இருந்தது.

  மோடியை எதிர்த்த பிரகாஷ் ராஜ்

  மோடியை எதிர்த்த பிரகாஷ் ராஜ்

  பிரகாஷ் ராஜ் மோடியை கடுமையாக சாடியவர். அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்களின் ஆதரவைப் பெற்றவர். படிப்பாளிகள், சிந்தனையாளர்கள் என எலைட் தரப்பின் ஆதரவைப் பெற்றவர். பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். பாஜக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து களம் கண்டார். வெல்வார் என்றும் கணிக்கப்பட்டார்.

  சாமானியர் மன்சூர் அலிகான்

  சாமானியர் மன்சூர் அலிகான்

  மறுபக்கம் மன்சூர் அலிகான், படு சாதாரணமாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியில் குதித்தார். எளிய மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி நின்றார். மக்களோடு மக்களாக மாறினார். மாட்டு வண்டியில் போனார், குதிரை வண்டியில் போனார், சைக்கிள் ஓட்டினார். வடை சுட்டார், கறி வெட்டினார். வாத்து விற்றார். கோழிக்குஞ்சு விற்றார். துணி துவைத்தார். சட்னி அரைத்தார். இட்லி சுட்டார். என்னதான் செய்யவில்லை.. எல்லாமும் செய்தார்.. மக்களுடன் மக்களாக கலந்து நின்று, எனக்கு ஓட்டுப் போடுங்கடா. உங்களுக்காதததான் நிற்கிறேன். வாழ்க்கை அழிஞ்சு போயிரும்டா என்று எதார்த்தமாக பேசி ஓட்டு கேட்டார்.

  ஆதரவு இல்லாத பிரகாஷ் ராஜ்

  ஆதரவு இல்லாத பிரகாஷ் ராஜ்

  பெங்களூர் மத்திய தொகுதியில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்த பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக பலரும் வந்து பிரச்சாரம் செய்தனர். அவர் மீதான புகழ் வெளிச்சம் அவர்தான் ஜெயிப்பார் என்று கட்டியம் கூறியது. ஆனால் நடந்தது வேறு.. வெறும் 28,906 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறி கொடுத்தார் பிரகாஷ் ராஜ். இதை அவர் உள்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.

  அன்பை வென்ற மன்சூர் அலிகான்

  அன்பை வென்ற மன்சூர் அலிகான்

  மன்சூர் அலிகானும் தான் டெபாசிட்டைப் பறி கொடுத்தார். ஆனால் அவர் வாங்கிய ஓட்டுக்கள் 54,957. பதிவான வாக்குகளில் இது கிட்டத்தட்ட 5 சதவீதம் ஆகும். பெரிய பின்புலம் இல்லாமல், அதிகம் பேசாமல், கிட்டத்தட்ட தன்னை தாழ்த்திக் கொண்டு பிரச்சாரம் செய்து மன்சூர் அலி கான் வாங்கிய ஓட்டுக்கள் இவை. எலைட் மக்களின் வாக்குகளாக இதைப் பார்க்க முடியாது. காரணம், சாமானிய மக்களின் கட்சியாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் இவை.

  பிரகாஷ் ராஜ் வாங்கிய வாக்குகளும், மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுக்களும் நம்மை சிந்திக்க வைக்கின்றன. மக்களின் மனோபாவம் அதை விட வியக்க வைக்கிறது.

  English summary
  NTK candidate and actor Mansoor Ali Khan has got more votes than actor Prakash Raj in their respective constituencies.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X