சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி | முத்தரசன் பரபர தகவல்- வீடியோ

    சென்னை: முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி நடிகர் மன்சூர்அலிகான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் மன்சூர்அலிகான் அளித்த பேட்டியில், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் மத்திய, மாநில அரசுகளையும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நுங்கம்பாக்கம் காவல்துறையில் புகார் அளிக்கபட்டது.

    mansoor ali khan plea rejected in madras hc

    இந்த புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி உத்தரவிட்டது. இதன்படி, அவர் எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரணடைந்து, விசாரணை அதிகாரி முன்பு கடந்த 5-ந்தேதி முதல் கையெழுத்திட்டு வருகிறார்.

    தேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சிதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சி

    இந்த நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். அதில் சினிமா படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி இருப்பதாகவும் எனவே நிபந்தனை தளர்த்த வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிபந்தனையை தளர்த்த கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    English summary
    Madras HC has rejected the plea of Actor Mansoor Ali Khan to relax the conditions of his anticipatory bail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X