சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் உச்சத்தை எட்டும் தண்ணீர் பஞ்சம்.. சமைக்க நீர் இல்லாததால் மூடப்படும் உணவகங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் சமைக்க நீர் இல்லாததால் மூடப்படும் உணவகங்கள்!

    சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.

    சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் மக்கள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தனியார் லாரி தண்ணீரையே அன்றாட தேவைக்கு சென்னை மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் லாரிகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் லாரிகளும் சொன்னப்படி தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாடு... கால்நடைகள் மடியும் அபாயம்... தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப உத்தரவு தண்ணீர் தட்டுப்பாடு... கால்நடைகள் மடியும் அபாயம்... தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப உத்தரவு

    வீட்டிலிருந்தே வேலை

    வீட்டிலிருந்தே வேலை

    தண்ணீர் பிரச்சனையால் சென்னை மக்கள் நகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை மாற்றி வருகின்றனர். தனியார் ஐடி நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனைக்காக ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

    மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ்

    மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ்

    பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை தண்ணீர் தட்டுப்பாடு. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கையோடு குடிக்க தண்ணீர் பாட்டீல்களையும் கொடுத்து அனுப்ப வேண்டும் என தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பி வருகிறது.

    தப்பாத உணவகங்கள்

    தப்பாத உணவகங்கள்

    இந்நிலையில் தண்ணீர் பிரச்சனைக்கு சென்னையில் இயங்கும் உணவகங்களும் தப்பவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டால் உணவக உரிமயாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு குடும்பத்திற்கே தேவையான தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை உள்ள நிலையில் உணவகங்களுக்கு தேவைப்படும் தண்ணீர் குறித்து சொல்ல வேண்டியது இல்லை.

    மூடப்படும் ஹோட்டல்கள்

    மூடப்படும் ஹோட்டல்கள்

    தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் தண்ணீர் லாரிகளும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதால் தண்ணீர் வாங்கி கட்டுப்படியாகவில்லை எனக்கூறி உணவகங்களை மூடியுள்ளனர் உரிமையாளர்கள்.

    பாதியாக குறைப்பு

    பாதியாக குறைப்பு

    ஒரு வாரத்திற்கும் மேலாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் சில உணவகங்கள் சமையலை பாதியாக குறைத்துள்ளன. மெனுக்களையும் உணவின் அளவையும் ஹோட்டல்கள் பாதியாக குறைத்துள்ளன.

    English summary
    Water shortage raising in Chennai. Many Hotels has been closed due to heavy water shortage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X