சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் வெற்றியால் தொழிலதிபர்கள் ஹேப்பியாம்.. எழுச்சியடைந்த பங்குச் சந்தை

Google Oneindia Tamil News

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பங்குச்சந்தை எழுச்சி பெற்றது.

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கி டிரெண்ட் வரத் துவங்கியதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ்ஸ 533 புள்ளிகள் குறைந்தது. நிப்டி 150 புள்ளிகள் குறைந்தன.

Many industrialists happy with congress win

ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் முன்னணி பெறுவது உறுதியானதும், பங்குகள் எழுச்சி பெற்றன. மதியம் 12.06 மணிக்கு, சென்செக்ஸ் 67.29 புள்ளிகள் குறைந்திருந்தது. நிப்டி 6.10 புள்ளிகள் குறைந்திருந்தது. சரிவில் இருந்து மீண்டு, இந்த அளவுக்கு, எழுச்சி பெற காங்கிரசின் வெற்றி டிரெண்டிங் காரணமாக கூறப்படுகிறது.

நிதித்துறை மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள்தான் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தன. பார்மா மற்றும் ஐடி பங்குகள், எழுச்சியோடு காணப்பட்டன. ரூபாய் வீழ்ச்சியடைந்தபோதிலும் இவை சீராக இருந்தன.

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகியது பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கூறுகையில், காங்கிரஸ் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக பல தொழிலதிபர்கள் தன்னிடம் கூறினார்கள் என்றார். தொழிலதிபர்களின் மகிழ்ச்சிதான், பங்குச் சந்தை ஏற்றமாக வெளிப்பட்டுள்ளது.

English summary
Congress leader Milind Deora said in India Today TV, many industrialists told him they are happy with congress winning and that is what is reflected in the markets today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X