சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி வி சிந்து.. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tokyo Olympics 2021 : Tokyo Olympics -ல் வெண்கலம் பதக்கம் வென்றார் PV Sindhu

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டனில் இன்று பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக 2016 பிரேசில் ஒலிம்பிக் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

    தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

    நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்த சிந்து, இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    பிரதமர் வாழ்த்து

    பிரதமர் வாழ்த்து

    இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பி வி சிந்து படைத்துள்ளார். இதையடுத்து பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பி.வி.சிந்து இன்று வெளிப்படுத்திய அபாரமான திறமை கண்டு அனைவரும் மகிழ்ந்தோம். டோக்யோவில் வெண்கலம் வென்றுள்ள சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை. எங்கள் மிகச்சிறந்த ஒலிம்பியன்களில் சிந்துவும் ஒருவர்" எனப் பதிவிட்டுள்ளார்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    அதேபோல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பை பி வி சிந்து பெற்றுள்ளார். நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவர் புதியதொரு அளவுகோலையே செட் செய்துள்ளார் எனக் கூறலாம். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

    அமித் ஷா

    அமித் ஷா

    உள் துறை அமைச்சர் அமித் ஷா, "பேட்மிண்டன் விளையாட்டின் மீதான ஒப்பற்ற அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் தேசத்திற்குத் தொடர்ந்து பெருமை சேர்ப்பீர்கள். உங்களின் இந்த குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அதேபோல காங்கிரஸின் ராகுல் காந்தியும் சி வி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார், ராகுல் தனது ட்விட்டரில், "இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

    English summary
    PV Sindhu won the consecutive bronze medals in Olympics. Many leaders including Modi, President wishes P V Sindu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X