சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் திடீரென ஒதுங்கிய நட்சத்திர மீன்கள்.. என்ன நடக்கக்போகுதோ? மக்கள் பீதி!

Google Oneindia Tamil News

சென்னை: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் திடீரென நட்சத்திர மீன்கள் வந்து சென்றதும் கரை ஒதுங்கியதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதேபோல் தெற்கு அரபிக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.

வழக்கமாக கேரள மாநிலத்தில ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் இதுவரை தொடங்கவில்லை. ஆனால் அதற்கு சாதகமான சூழல் நிலவுவதால் நாளை மறுநாள் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குதான், ஊருக்குள்ள ஒரு எச். ராஜா இருக்கணும்கிறது..பாரதி தலைப்பாகை.. கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி இதுக்குதான், ஊருக்குள்ள ஒரு எச். ராஜா இருக்கணும்கிறது..பாரதி தலைப்பாகை.. கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி

மன்னார் வளைகுடா கொந்தளிப்பு

மன்னார் வளைகுடா கொந்தளிப்பு

ஒரு வாரம் தாமதமாக தொடங்கினாலும் கேரளாவில் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு அறிகுறியாக மன்னார் வளைகுடா கடற்பகுதி கடந்த சில நாட்களாக கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

உயரமாக எழுந்த அலைகள்

உயரமாக எழுந்த அலைகள்

நேற்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.

கரை ஒதுங்கிய நட்சத்தி மீன்கள்

கரை ஒதுங்கிய நட்சத்தி மீன்கள்

இந்நிலையில் பாம்பன் முந்தல்முனை கடலோர பகுதிகளில் ஆர்ப்பரித்த அலைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென ஏராளமான நட்சத்திர மீன்கள் வந்து சென்றன. சில நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கின.

திடீரென ஒதுங்கியதால் மக்கள் பீதி

திடீரென ஒதுங்கியதால் மக்கள் பீதி

சிவப்பு நிற நட்சத்திர மீன்களே அதிகளவு கரைக்கு வந்தன. இதனை ஆர்வமுடன் பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றை போட்டோவும் எடுத்தனர். இருப்பினும் திடீரென கடல் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில் நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கியது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

சுனாமிக்கு பிறகு மக்கள் அச்சம்

சுனாமிக்கு பிறகு மக்கள் அச்சம்

ஏற்கனவே அதிகளவு டால்பின்கள் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது காணப்பட்டு வருகிறது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடல் சார்ந்து என்ன நடந்தாலும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அதிகளவு பவளப்பாறைகள்

அதிகளவு பவளப்பாறைகள்

200 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மன்னார் வளைகுடா 20க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. மேலும் அதிகளவு பவளப்பாறைகளும் இந்த மன்னார் வளைகுடா பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Many numbers of Star fish arrived Gulf of Mannar seashore. Sea looks rough in gulf of Mannar due to southwest monsoon arrival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X