• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

2035-இல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்படும்.. மெரினா காணாமல் போகும்.. ஐஐடி பேராசிரியர்

|

சென்னை: சென்னையில் 2015-ஆம் ஆண்டை காட்டிலும் பல மடங்கு அதிகமான மழைப் பொழிவு வரும் காலங்களில் ஏற்படலாம் என்றும் மெரினா உள்பட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகள் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்திய கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் 2015-ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தை விட பல மடங்கு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு ஆய்வு செய்ததாக கூறுகிறார் சென்னை ஐஐடி ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் பாலாஜி.

கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை

இருபதாண்டு

இருபதாண்டு

இதுகுறித்து பிபிசி தமிழுக்கு பேராசிரியர் பாலாஜி அளித்த பேட்டியில் சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு இருபதாண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழியின் தீவிரம் அதிகரிக்கும்.

 பெருவெள்ளம்

பெருவெள்ளம்

2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப் பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம்.

 வெளியேறும் மழை நீர்

வெளியேறும் மழை நீர்

மேலும், சென்னை மற்றும் அதை சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சனை ஏற்படக்கூடும். வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் எண்ணற்ற விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

வளிமண்டலம்

வளிமண்டலம்

அதாவது, பூமியின் தரைப் பகுதியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி செல்லும் கரியமில வாயு புவியின் வெப்ப நிலையையும் காற்றில் ஈரப்பதத்தையும் அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டு அதிதீவிர மழைப்பொழிவுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, கடலில் உருவாகி நிலத்தை நோக்கி நகரும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உள்ளிட்ட மழை காரணிகள் இயல்பை விட அதிக காலத்துக்கு கடல் பகுதியிலேயே நிலை கொள்ளும் வாய்ப்புள்ளது.

 மழைப் பொழிவு

மழைப் பொழிவு

இதனால் அவை நிலத்தை நோக்கி வரும்போது மழைப்பொழிவின் தீவிரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதே போன்று கரியமில வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்துக் கொண்டே சென்றால், கடலின் வெப்பநிலை அதிகரித்து இயல்புக்கும் அதிகமாக நீர் ஆவியாகும். இதனால், ஒரு வார காலத்தில் பொழியும் மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் அபாயம் உண்டாகலாம்" என்று அவர் கூறுகிறார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை

 
 
 
English summary
Chennai IIT researcher and Professor Balaji says that upcoming days Marina and more beaches in Chennai will be missing as there will be a big flood in Capital of Tamilnadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more