India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏதோ நடக்கப்போகுது.. திட்டத்தோடு வந்த கும்பல் - ஓபிஎஸ் அம்மாவை திட்டினாங்க.. ‘பகீர்’ கிளப்பிய மருது!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வழக்கமாக நடக்கும் வகையில் நடைபெறவில்லை. பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என மருது அழகுராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம், எடப்பாடி பழனிசாமி உடன் இருப்பவர்களே கலகத்தை உருவாக்குகிறார்கள் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக செய்தித் தொடர்பாளரும், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியராக இருந்தவருமான மருது அழகுராஜ், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மருது அழகுராஜ் பேசியதாவது:

ஜூலை 11..பொதுச்செயலாளர்! அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பறந்த கடிதம்! சொல்லியடிக்கும் எடப்பாடி! ஜூலை 11..பொதுச்செயலாளர்! அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பறந்த கடிதம்! சொல்லியடிக்கும் எடப்பாடி!

சுயநலமே காரணம்

சுயநலமே காரணம்

ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் இருவரும் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப்போய், அதிமுகவின் பொன்விழா ஆண்டில் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற வருத்தத்தில் இருந்ததால் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். யாருடைய சுயநலம் இந்த பிளவிற்கு காரணம் என தெரியும். உட்கட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒரே விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இரட்டைத் தலைமையை ஒற்றைத் தலைமையாக மாற்ற வேண்டிய தேவை என்ன?

தீர்மானங்கள்

தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழுவுக்கான தீர்மானங்களை இயற்றும் குழுவில் நானும் இருந்தேன். 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு நான்தான் இரண்டு தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தேன். இருவருமே ஒப்புதல் அளித்தனர். பதிவு செய்துதான் பொதுக்குழுவில் உறுப்பினர்களை அனுமதிப்பது வழக்கம். தலைமைக் கழக ஊழியர்கள், கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு, மாணவர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தான் இந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள். ஏறத்தாழ 18 வருடங்களை அ.தி.மு.கவுக்காக ஒப்படைத்துள்ளேன்.

 அடியாட்கள் மயம்

அடியாட்கள் மயம்

நான் பல பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயம். திட்டமிட்டு அழைத்து வரப்பட்ட ஆட்கள். நிறைந்திருந்தனர். அப்போதே எனக்கு, ஏதோ நடக்கப்போகிறது எனத் தெரிந்தது. திட்டமிட்டு திரட்டப்பட்ட கூட்டத்தின் கண்களில் ஒரு ஆவேசம் தெரிந்தது. ஏதோ உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவது தெளிவாகவே தெரிந்தது.

 காது கொடுத்து கேட்க முடியாத

காது கொடுத்து கேட்க முடியாத


ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் உள்ளே வரும்போது நிர்வாகிகளுக்கு பின்னர் அமரவைக்கப்பட்டிருந்த கூட்டம், செவி கொடுத்து கேட்க முடியாத நா கூசக்கூடிய வார்த்தைகளால் பேசினார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரையும் வசைச் சொற்களால் திட்டினர். வெளியே போடா என்று சொல்லி கூச்சலிட்டனர். ஜனநாயகத்தில் போட்டி வரலாம்; அதில் வெற்றிபெற சில யுக்திகள் உள்ளது. அதற்காக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

வேடிக்கை பார்த்த எடப்பாடி

வேடிக்கை பார்த்த எடப்பாடி

அரைமணி நேரத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் முடிந்தது என்றால் அது இந்த பொதுக்குழு தான். இந்தியாவிலேயே ஒரு பொதுக்குழு கூட்டம் நேரலை செய்யப்பட்டது என்றால் அது இந்த பொதுக்குழு கூட்டம்தான். திட்டமிட்டு ஓ.பி.எஸ்ஸை அசிங்கப்படுத்தி உள்ளனர். இவ்வளவு நடந்தும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என மேடையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. நான்கரை ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்த அனுபவம் மிக்க ஈபிஎஸ், அந்த நிகழ்வை தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.

பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம்

பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம்

எந்த காலத்திலும் அதிமுகவின் பொதுச் செயலாளரை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேர்வு செய்ய முடியாது என்பது அதிமுகவின் அடிப்படை சட்டம். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதி அது. பணம் கொடுத்து எதையும் செய்யலாம் என நினைப்பவர்களால் எடப்பாடி பழனிசாமி சூழப்பட்டுள்ளார். இன்று இருக்கக்கூடிய பணத்தை வைத்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சிகளின் பொதுக்குழு உறுப்பினர்களையும் வாங்க முடியும். நில அபகரிப்பு போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடைபெற்று வருகிறது." எனத் தெரிவித்தார்.

English summary
AIADMK spokesperson Maruthu Alaguraj has alleged that ADMK general body meeting was not held in the usual manner, and it was clear that they were acting with some ulterior motive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X