சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் சார்.. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேண்டாமா.. ஜெயக்குமாருக்கு அருணணன் பொளேர்!

Google Oneindia Tamil News

சென்னை: புதிதாக எந்த கட்சி வந்திருக்கிறது? பாெய் சாென்னாலும் பாெருந்த சாெல்ல வேண்டாமாே? என்று அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு அருணன் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற, மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அந்த ஒரு நாளுக்காக தான் அத்தனை கட்சிகளும் இன்று முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, வரும் தேர்தலில் மெஜாரிட்டி இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்பிருப்பதாக 'பிகே' தரப்பில்... அதாங்க பிரஷாந்த் கிஷோர் தரப்பில் ரிப்போர்ட் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், திமுக தரப்பு சற்று நிம்மதியாக உள்ளது. எனினும், திமுக கூட்டணி கட்சிகளிடையே தான் சிக்கல் நீடிக்கிறது. அவர்கள் கேட்கும் தொகுதிகளுக்கும், திமுக தர விரும்பும் தொகுதிகளுக்குமான தொலைவு என்பது தாம்பரம் டூ பீச் வரை இருக்கிறதாம்.

Marxist leader arunan reply to minister jeyakumar about admk alliance

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்தாலும், பாஜக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக திமுக கூட்டணியில் இருப்பதாக அவர்களே தெரிவித்துள்ளனர். மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான பேச்சவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது.

அதேசமயம் அதிமுக, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'கிளைமேக்ஸ்' எட்டிவிட்டது. தேமுதிகவுடனான டாக் மட்டுமே அங்கு இழுபறியில் உள்ளது. அந்த வகையில் திமுகவை விட அதிமுக விரைவாக பணிகளை முடிந்துவிட்டது எனலாம்.

இந்நிலையில், ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான டி,ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து கட்சிகளும் அதிமுகவை விரும்புகின்றன என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பேராசிரியர் அருணன் தனது ட்விட்டரில், "அனைத்து கட்சிகளுமா? ஏற்கெனவே இருந்த தமிமுன் அன்சாரி, சரத்குமார், கருணாஸ் ஆகியாேரது கட்சிகள் விலகியுள்ளன. புதிதாக எந்த கட்சி வந்திருக்கிறது? பாெய் சாென்னாலும் பாெருந்த சாெல்ல வேண்டாமாே?" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்த வெளியேறிய சரத்குமார், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்று கருணாஸும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது மட்டுமின்றி, அதிமுக தோல்விக்காக வேலை செய்வோம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Marxist leader arunan reply to minister jeyakumar about admk alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X