சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும்.. விஜய் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் விஜய் பேசும் போது உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும் என்றார்.

தலைவா படத்தில் இருந்தே விஜய்யின் ஒவ்வொரு படமும் சரி, அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாக்களும் விஜய்யின் அரசியல் குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

விஜய்யின் படம் எந்த மாதிரியான கதை அம்சத்தில் இருந்தாலும் தவிர்க்க முடியாத அளவுக்கு அரசில் பன்ஞ்சுகள் இடம் பெற்று வருகின்றன. மாஸ்டர் படத்தின் பாடல்களும் மறைமுகமாக அரசியல் பேசுகின்றன.

மாற்றங்கள் வரும்

மாற்றங்கள் வரும்

குட்டி ஸ்டோரி பாடலில் உள்ள கருத்துக்கள் எல்லாம் வெகு சாதாரணமாக தெரிந்தாலும் அதன் அர்த்தங்கள் அரசியல் பேசுகின்றன. இதேபோல் நேற்று வெளியான வாத்தி ரெய்டு பாடலும் பல அரசியல் பஞ்சுகளை சுமந்து வந்துள்ளது. உதாரணமாக பாடலின் ஒரு லைனில் "they call me master matrangal varum faster" என்ற லைன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த லைன் படி அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள், மாற்றங்கள் வரும் வேகமாக என்பதாக, அதேபோல் ரெய்டு என்ற வார்த்தையும் அண்மையில் விஜய்யிடம் நடத்தப்பட்ட ரெய்டை குறிக்கும் வகையில் உள்ளது.

நிறைய நற்பணிகள் செய்கிறார்

நிறைய நற்பணிகள் செய்கிறார்

இப்படி பல முடிச்சுக்கள் போட்டு பேச காரணம் விஜய் பொதுவாக அரசியலில் ஈடுபடவே விரும்பி வருகிறார். அவர் தான்னா முடிந்த நல்ல விஷயங்களை பொதுவெளியில் சத்தம் இல்லாமல் செய்து வருகிறார். தனது ரசிகர்களுக்கும் நிறைய உதவிகளை விஜய் செய்து வருகிறார்கள். இதேபோல் விஜய் நற்பணி மன்றங்கள் மூலம் ரசிகர்களும் பல நலதிட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி உள்ளது. எனவே விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ளது.

யாரை எங்க உட்கார

யாரை எங்க உட்கார

கடந்த முறை பிகில் இசை வெளியிட்டு விழாவில நேரடியாகவே அரசியல் பேசினார். பேனர் விபத்தில் இறந்த சுவாதி விவகாரத்தை பேசிய விஜய், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ. அங்கு உட்கார வைக்க வேண்டும்' என்று குட்டிக்கதையுடன் எடுத்துரைத்தார். அது அதிமுகவினருக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் அந்த விழா நடந்த கல்லூரிக்கு அனுமதி இல்லாமல் எப்படி விழா நடந்தது என நோட்டீஸ் வந்தது. அதிமுகவினரும் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.

ரஜினியின் அரசியல்

ரஜினியின் அரசியல்

அண்மையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவு சமீபத்தில் வெளியானது இதன் முடிவில், விஜய் முழுமையாக வரி கட்டியதாகவும், விஜய்க்கு கிளீன் இமேஜை வருமான வரித்துறை கொடுத்தது. இதற்கிடையே நடிகர் ரஜினி அண்மையில் அரசியல் மாற்றம், மக்கள் எழுச்சி என்று அண்மையில் பேசியுள்ளார். எனவே விஜய் என்ன மாற்றத்தை அரசியலில் விரும்புகிறார் என்பதை மாஸ்டர் இசை வெளியிட்டு விழாவில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு இருந்தது.

விஜய் என்ன பேசினார்

விஜய் என்ன பேசினார்

நடிகர் விஜய் பேசும் போது ‘'எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே'' என்ற பாடலில், ‘'நீ நதி போல ஓடிக்கொண்டிரு'' என்ற வரி இடம்பெறும். நதி போல ஓடிக்கொண்டிரு என்பதுதான் முக்கியம். கிட்டத்தட்ட அனைவரது வாழ்க்கையும் ஒரு நதி மாதிரிதான். சில இடங்களில் வணங்குவார்கள், வாழ்த்துவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல்லெறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரிதான் நம் வாழ்க்கையும். நமது வேலையை, நமது கடமையை செம்மையாக செய்துவிட்டு, அந்த நதி மாதிரி அமைதியாக போய்க்கொண்டிருக்க வேண்டும். லைப் இஸ் வெரி சார்ட் நண்பா. ஆல்வேஸ் பி ஹாப்பி. டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ. கொஞ்சம் சில் பண்ணும் ஹாப்பி. அவ்வளவுதான் மேட்டர்.' என்றார்.

English summary
master movie audio launch: actor vijay may speech about politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X