சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாஸ்டர் ப்ளான்.. "கண்ணசைத்த" மேலிடம்.. குறுக்கே வந்த திருமாவளவன்.. ஆர்எஸ்எஸ்?.. எகிறிய ராதாகிருஷ்ணன்

மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கலாச்சார அமைப்பு என்ற வடிவில், திரைக்கு பின்னால் அரசியல் பணிகளை செய்து கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பானது, பொய்களை மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறது" என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 2ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த பேரணிக்கு அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், தமிழகத்தின் அரசியல் விமர்சகருமான ஆர்கே ராதாகிருஷ்ணன் , ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்தான் இவை:

 ஆர்எஸ்எஸ் பேரணி..காந்தியை கொன்றவர்களே பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்கலாமா? போலீஸ் வாதம் ஆர்எஸ்எஸ் பேரணி..காந்தியை கொன்றவர்களே பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்கலாமா? போலீஸ் வாதம்

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பாஜகவும், சங் பரிவார அமைப்புகளும் எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்துவிட நினைக்கிறார்கள்.. அதற்கு பல முகாந்திரங்கள் மூலமாக முயற்சி செய்கிறார்கள்.. முதலில் கோவை குண்டுவெடிப்பு நடந்தது.. அதற்கு பிறகு ஒரு வளர்ச்சி அங்கு ஏற்பட்டது.. ஆனால், அது அப்படியே நின்றுவிட்டது. அதை தாண்டி பெரிதாக வளரவில்லை.. ஒரு கமல்ஹாசன் அங்கே போய் நின்றதால்தான், வானதி சீனிவாசன் அங்கே வெற்றி பெற்று வருகிறாரே தவிர, வேறு ஒன்றும் கோவையில் செய்ய முடியவில்லை.

 கமல் + வானதி

கமல் + வானதி

இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தின் மற்ற இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை வைத்து வளர பார்த்தார்கள்.. அது ஏறத்தாழ போலீஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவே போய்விட்டது.. சிலைகளை போலீசாரே பத்திரமாக வேனில் எடுத்து சென்று, போலீசாரே கடலில் கொண்டுபோய் கரைத்து விட்டு வருகிறார்கள்... அதனால், அந்த முயற்சியும் தோல்வியில் விழுந்துவிட்டது. ஆக, கலவரங்கள், ஆண்டனை வைத்து அரசியல் செய்வது என்ற அவர்களின் இரண்டு யுக்தியுமே தோற்றுவிட்டன..

 ஹிந்து + ஆபத்து

ஹிந்து + ஆபத்து

மூன்றாவதாக, மனிதர்களின் பிரச்சனையை அதாவது ஹிந்து ஆபத்தில் உள்ளான் என்ற அரசியலை கையில் எடுத்தார்கள்.. தஞ்சையில் மாணவி உயிரிழந்தது என்பன போன்ற அரசியலை முன்னெடுத்தார்கள்.. அதுவும் எடுபடவில்லை.. காரணம், அதில் முன்னுக்குப்பின் பல முரணான விஷயங்கள் இருந்தன.. அதேபோல இன்னொரு பள்ளியின் எரிப்பிலும் அரசியல் செய்ய பார்த்தது.. அதுவும் எடுபடவில்லை.. இப்போது அடுத்த ஐடியாவை துவக்கி உள்ளனர்.. 50 நகரங்களில் இப்படி ஒரு ஊர்வலம் என்கிறார்கள்.. அதுவும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இருக்கின்ற பகுதிகளில் இந்த ஊர்வலம் செல்லும்போது, அதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்?

 ஆரம்பமே பொய்

ஆரம்பமே பொய்

தங்களை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லி கொள்கிறது ஆர்எஸ்எஸ்.. கலாச்சார நோக்கத்துக்கு எப்படி ஒரு அரசியல் நோக்கம் இருக்க முடியும்.. ஹிந்து ராஷ்டிராவை இந்தியாவில் நிறுவுவேன் என்று ஒரு கலாச்சார இயக்கம் சொல்ல முடியும்? இது ஒரு அரசியல் நோக்கம்தானே? அப்படியானால் உங்கள் ஆரம்பமே பொய்யில்தான் துவங்குகிறது.. அதேபோல நீங்கள் என்ன வாக்குறுதிகள் தந்தாலும், அதை நீங்கள் இதுவரை கடைப்பிடித்ததும் கிடையாது..

 10% ஓட்டு

10% ஓட்டு

92-ல் பாபர் மசூதி இடிப்பின்போது, ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சார நாயகனாக இருந்த முதல்வர் கல்யாண் சிங் வாக்குறுதி தந்தார்.. அந்த வாக்குறுதிகளை மீறித்தான் அப்போது ஆர்எஸ்எஸ்காரர்கள் சூறையாடினார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.. கோர்ட்டுக்கு போய் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று வாதிட்டார்கள்.. இப்படியெல்லாம் இவர்கள் கடந்த காலங்களில் முன்னுக்குபின் முரணாக பேசியிருக்கிறார்கள்.. இவ்வளவு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் பிளான் செய்து வருகிறார்கள்.. 10 சதவீதம் வாக்குகள் இங்கு எப்படியாவது கிடைத்துவிடுமா? என்று முயற்சி செய்கிறார்கள்..

 மியூசிக் அகாடமி

மியூசிக் அகாடமி

விசிக மற்றும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் சேர்த்தே இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. திமுக, விசிக இருவரும் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு, ஆர்எஸ்எஸ் பேரணியை தடுத்தது போன்ற ஒரு பிம்பம் கிடைக்கிறதா என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. நானும் அதையேதான் கேட்கிறேன்.. ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார இயக்கம் என்கிறார்கள்.. அப்படியானால், நாரதகான சபா எத்தனை முறை ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்? மியூசிக் அகாடமி எத்தனைமுறை ஊர்வலங்களை நடத்தியிருக்கிறது? வேற வழியில்லை.. கலாச்சார அமைப்பு என்ற வடிவில், திரைக்கு பின்னால் அரசியல் பணிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள்.. அதற்கு நீங்கள் பொய்களை சொல்லி கொண்டிருக்கிறீர்கள்..

உசிதம்

உசிதம்

அப்படி இருக்கும்போது, திமுக பக்கம் இந்த மாதிரியான ஒரு ஆயுதம்தான் பிரயோகிக்க வேண்டும்.. அதை திமுக நேரடியாக செய்ய முடியாது.. தமிழகத்தை ஆளுகின்ற கட்சியாக உள்ளது.. அதனால் விசிக அதை செய்தது தவறில்லை.. காரணம், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தங்களை, சனாதன சித்தாந்தங்களை எதிர்ப்பது விசிகவை பெரிதாக பாய்ந்து எதிர்ப்பது யாரும் கிடையாது.. இப்படி தடை செய்தது உசிதமானது என்றே நினைக்கிறேன்.. காந்தியின் பிறந்தநாளில், நிச்சயம் இப்படி ஒரு அவலம் தமிழகத்தில் அரங்கேற கூடாது, அப்படி அரங்கேறினால், நிச்சயமாக மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி தர வேண்டும்..

 50 மேஜர் இடங்கள்

50 மேஜர் இடங்கள்

இப்போதுதான் பிஎப்ஐ விவகாரம் உள்ளது.. பிஎப்ஐ தமிழகத்தில் மிக முக்கியமமான அமைப்பாக உள்ளது.. அதனால் பதற்றமாக இருக்கிறது.. அதனால், 50 நகரங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி தர முடியாது என்று அரசு சொல்கிறது.. இதைதாண்டி நீதிமன்றம், அனுமதி தருகிறதென்றால், நீதிமன்றமா போலீஸை வழிநடத்துகிறது? அவர்களா தெருவில் வந்து நிற்பார்கள்? அதனால், அதிகார வரம்புகள் அறியப்பட வேண்டும்.. நாளைக்கு நீதிமன்ற தீர்ப்பு சரியில்லை என்று சொல்லி, ஸ்டாலின் வேறு ஒரு தீர்ப்பை தர முடியுமா? எனவே, காவல்துறை சார்பில், தங்களுக்கான நடைமுறை சிக்கலை எடுத்து சொன்னால், அதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்பதே கருத்து..

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் இப்போது என்ன செய்துவிட்டதென்றால், கோர்ட் அவமதிப்பாக விஷயத்தை திசைதிருப்பிவிட்டது.. இதுதான் அதனுடைய சூழ்ச்சி.. முதலில் ஊர்வலத்துக்கு அனுமதியை, போலீஸை விட்டுவிட்டு கோர்ட்டில் போய் ஏன் இவர்கள் வாங்க முற்படவேண்டும்? எப்போது பேரணிக்கு அனுமதி கேட்டாலும், போலீஸ் தரப்பில் மறுப்பு சொல்லப்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் தரப்பில் வாதம் வைக்கிறார்கள்.. அப்படியானால் இந்த வாதத்தையும் கேட்டுக்கொண்டு நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளதுதான் எனக்கு பெரிய வருத்தமாக உள்ளது.

 2 எதிரிகள்

2 எதிரிகள்

அதுமட்டுமல்ல, நீதிமன்றத்தையும், திமுகவையும் இரு துருவத்தில் உள்ள 2 எதிரிகள் போன்று பார்க்கக்கூடிய பிம்பம் வந்துவிட்டது.. இது முற்றிலும் தவறு.. ஒரு மாநிலத்துக்கோ, ஒரு மாவட்டத்துக்கோ நெருக்கடி ஏதாவது வரும்போது, அந்த நெருக்கடியை கேட்டுக்கொள்ளக்கூடிய இடத்தில் நீதித்துறை கேட்டுக் கொள்ள வேண்டும்.. அதை சம்பந்தப்பட்ட தரப்பிலும் விளக்க முற்படும்போது, நிச்சயம் நீதித்துறை செவிசாய்க்கும் என்றே நம்புகிறேன்" என்றார்.

English summary
Master Sketch: Did the DMK Govt join hands with VCK to stop the RSS rally, explains Sr Journalist RK Radhakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X