சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏமாந்த சென்னை பெண்.. விவாகரத்தான பெண்களே குறி.. மனோகரன் சிக்கியது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: மறுமணத்திற்காக பிரபல மேட்ரிமோனியலில் பதிவு செய்த பெண்ணிடம் மாதம் 3 லட்சம் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பித்து அடிக்கடி செல்போனில் பேசி, ரூ.10 லட்சம் ஏமாற்றிய நபரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டையை சேர்ந்த 40 வயது பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது மீனா கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை இருக்கும் நிலையில், 9 மாதங்களுக்கு முன், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து பெற்று பிரிந்தேன். பின்னர், மறு மணத்திற்காக பிரபல மேட்ரிமோனியலில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தேன்.

உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை...என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை - டாக்டர் ராமதாஸ் வேதனை உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை...என்று முடிவுக்கு வரும் இந்தக் கொடுமை - டாக்டர் ராமதாஸ் வேதனை

மறுமணம்

மறுமணம்

அதை பார்த்து என்னை மனோகரன் என்பவர் தொடர்பு கொண்டார். ஆந்திர மாநிலத்தில் வசித்து வருகிறேன். நானும் விவாகரத்து பெற்றவன்., சொந்த தொழிலில் மாதம் ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டி வருகிறேன் என்றார். அதை நம்பி நானும் மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.

விபத்தில் சிக்கினேன்

விபத்தில் சிக்கினேன்

பின்னர், எனக்கு புதிய செல்போன் உட்பட பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்தார்.. மறு மணத்திற்கு பிறகு என்னை அன்பாக கவனித்துக் கொள்வதாக உறுதி கொடுத்தார் இந்நிலையில், ஒரு நாள் என்னை செல்போனில் தொடர்புகொண்டவர், விபத்தில் சிக்கியதாகவும், மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

நம்பி கொடுத்தேன்

நம்பி கொடுத்தேன்

வருங்கால கணவர் என்பதால், அவரது வங்கி கணக்கில் பல தவணையாக ரூ.10 லட்சம் வரை செலுத்தினேன். சில நாட்களுக்கு பிறகு அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் மேட்ரிமோனியலில் கொடுத்திருந்த முகவரியை பெற்று விசாரித்தபோது, அது போலியானது என தெரியவந்தது.

மனோகரன் செய்த மோசடி

மனோகரன் செய்த மோசடி

எனவே மனோகரன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும், என மீனா கூறியிருந்தார் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த மனோகரன் (45), பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

ஐதராபாத்தில் சிக்கினார்

ஐதராபாத்தில் சிக்கினார்

இவர் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருவதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில், இவ்வாறு பல பெண்களை தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் கணடுபிடிக்கப்பட்டது. ஐதராபாத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்தனர். அவரை விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

English summary
Chennai police arrested a person who cheated Rs 10 lakh from the woman who registered for the famous matrimonial for remarriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X