சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ்

தேமுதிக அலுவலகத்தில் மே தின கொடி ஏற்றி வைத்தார் விஜயகாந்த்.

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளை வேட்டி, சட்டை, விபூதி சகிதம்.. தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தின கொடி ஏற்றினார் விஜயகாந்த்!

இன்று மே தினம் என்பதால், நாடெங்கும் மே தின பேரணி, கூட்டங்கள் நடந்து வருகிறது. தலைவர்களும் தொழிலாளர்களுக்கு மேதின தின வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

மே தினம் என்றால் ஆண்டுதோறும் விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி ஆபீசுக்கு வந்து கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவார். அதன்படி இன்றும் விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். கூடவே பிரேமலதா, சுதீஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

டாக்டர் ராமதாஸை கரைத்து போட்ட பாடல்.. நீங்களும் கேளுங்கள்.. மனம் கனத்து போவீர்கள்! டாக்டர் ராமதாஸை கரைத்து போட்ட பாடல்.. நீங்களும் கேளுங்கள்.. மனம் கனத்து போவீர்கள்!

ஆரவாரம்

ஆரவாரம்

மே தின கொடியை பிரேமலதாவுடன் சேர்ந்து ஏற்றி வைத்தார் விஜயகாந்த். ஆனால் அவரால் கொடியின் கயிற்றினை வேக வேகமாக ஏற்ற முடியவில்லை. பிரேமலதாதான் ஏற்றினார். அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறின.. கட்சி தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சல்யூட்

சல்யூட்

பின்னர் அனைவரும் சல்யூட் வைத்தார்கள். எல்லோரும் கட்சி கொடியை பார்த்து சல்யூட் அடித்தால், விஜயகாந்த் வேறு எங்கோ பார்த்து சல்யூட் வைக்கிறார்.

சீருடைகள்

சீருடைகள்

ஒயிட் அண்ட்ஒயிட்டில் வந்திருந்த விஜயகாந்த்தை பார்த்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். கிட்டத்தட்ட 600 ஓட்டுனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினமான இன்று சீருடைகள் வழங்கினார் விஜயகாந்த். தொடர்ந்து கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொன்னார்.

அமெரிக்கா

அமெரிக்கா

உடம்பு சரியில்லை.. அதனால சிகிச்சைக்காக திரும்பவும் அமெரிக்கா கூட்டி செல்வதாக சொன்னார்கள். ஆனால் பார்ப்பதற்கு விஜயகாந்த் தெளிவாகவே இருக்கிறார். பார்க்க சந்தோஷமா இருக்கு!

English summary
DMDK President Vijaykanth hoisted May Day flag in Koyambedu Head Office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X