சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா! நல்ல செய்தி... மண் வாசம் வீசும், மழை பெய்யும்... மக்கள் மனம் குளிரும்

Google Oneindia Tamil News

சென்னை : தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது கோடை மழை குளிர்விக்கும் என எதிர்பார்த்த நிலையில் , கோடை மழையும் ஏமாற்றி விட்டதால் மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

Maybe rain start, day after tomorrow says Chennai weather research centre

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

ஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம் ஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம்

மேலும் நாளை முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து , நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் எனவும், அதிகமாகவோ அல்லது குறைவான அளவிலோ இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Summer rain start may be day after tomorrow weather service centre report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X