சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக இருந்த விழுப்புரம் மாவட்டம் அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாக பிரிக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி என இருமாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

Mayiladuthurai become a new district in Tamil Nadu: says chief minister edappadi palanisamy

இதன்படி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டதால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் 38வது மாவட்டமாக தற்போது மயிலாடு துறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி! முக்கிய உத்தரவுகளுக்கு வாய்ப்புஇன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி! முக்கிய உத்தரவுகளுக்கு வாய்ப்பு

சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகப்பட்டினம் மயிலாடுதுறை என இரண்டாக பிரித்து இரண்டு தனிமாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைகிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

English summary
chief minister edappadi palanisamy announced in assembly that Mayiladuthurai become a new district in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X