சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெளனக் குமுறலில் மதிமுகவினர்.. ஆஹா.. இந்த சர்கார் சர்ச்சையை மறந்துட்டீங்களே!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்க்காரில் வரும் கட்சி கொடியால் குமுறலில் மதிமுகவினர்- வீடியோ

    சென்னை: சர்கார் படம் தொடர்பாக ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் மதிமுகவினரும் கூட ஒரு வித அதிருப்தியில் உள்ளனர்.

    சர்கார் படம் தொடர்பாக ஆளுங்கட்சி கடும் கோபத்துடன் உள்ளது. தங்களது தலைவர் ஜெயலலிதாவை படத்தில் மோசமாக சித்தரித்துள்ளதாக அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பான போராட்டத்தின் எதிரொலியாக சில காட்சிகளை படத்திலிருந்து நீக்க சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முன்வந்துள்ளது. இன்று முதல் அந்தக் காட்சிகள் இருக்காது என்று கூறியுள்ளனர்.

    [சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!]

    மதிமுக குமுறல்

    மதிமுக குமுறல்

    இந்த நிலையில் மற்றொரு பக்கம் மதிமுகவினர் மெளனமாக குமுறிக் கொண்டுள்ளனர். அதாவது சர்கார் படத்தில் வரும் வில்லனின் கட்சி அதாவது முதல்வராக வரும் பழ கருப்பையாவின் கட்சிக் கொடிதான் அவர்களது குமுறலுக்குக் காரணம். பழ. கருப்பையா கட்சியின் கொடியும், மதிமுக கொடியும் ஒரே மாதிரியாக உள்ளது.

    மதிமுக கொடிதான் கிடைத்ததா

    மதிமுக கொடிதான் கிடைத்ததா

    அது எப்படி மதிமுகவின் கொடியை வில்லன் கட்சிக் கொடி போல காட்டலாம் என்று மதிமுகவினர் வேதனை தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒரு பொதுவான கலரில் கட்சிக் கொடியை வைத்திருக்கலாமே. எங்க கொடிதான் கிடைத்ததா. சர்கார் படத்தில் எப்படி விஜய் போராடுகிறாரோ நிஜத்தில் வைகோ நீண்ட காலமாகவே மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

    மக்களுக்காக போராடும் தலைவர்

    மக்களுக்காக போராடும் தலைவர்

    நதி நீர்ப் பிரச்சினைகள், ஸ்டெர்லைட் விவகாரம் உள்பட மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் வைகோவைத் தவிர்த்து தமிழகத்தின் வரலாற்றை எழுதி விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு தலைவரின் கட்சிக் கொடியை வில்லன் கட்சிக் கொடியாக சித்தரித்திருப்பதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே மதிமுகவினரின் கோரிக்கையாகும்.

    தெரிந்தோ, தெரியாமலோ

    தெரிந்தோ, தெரியாமலோ

    உண்மையில் அந்தப் படத்தில் வரும் கட்சிக் கொடி மதிமுக கொடி போலத்தான் உள்ளது. இதை ஏ.ஆர். முருகதாஸ் இதை தெரியாமல் செய்து விட்டாரா அல்லது ஏதாவது உள் குத்து இருக்கா.. அவர்தான் விளக்க வேண்டும்.

    English summary
    MDMK cadres are not happy with Sarkar villain party flag, as it looks like MDMK party flag.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X