"சைலண்ட் & ஆக்ஷன்".. எடப்பாடி பழனிசாமியை விடுங்க.. "அவரை" பற்றி துரை வைகோ சொன்ன பஞ்ச் பாருங்க..!
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதிலளிக்கவில்லை.. ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று மதிமுகவின் துரை வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
பெரிதும் பல காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட, பேரறிவாளன் மனு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?
சுப்ரீம்கோர்ட் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவை செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது... தேச வரலாற்றில் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது..

வரவேற்பு
இந்த தீர்ப்பை பல தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், "முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.. மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்..

ஜெ.போட்ட விதை
அதேபோல, கேஎஸ் அழகிரி, தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை... அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்... இதனிடையே, தாங்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இந்த தீர்ப்பு என்று திமுக தரப்பு கொண்டாடி வருகிறது.. மற்றொரு பக்கம், ஜெ.அன்று போட்ட விதைதான் இன்று தீர்ப்பாக வந்துள்ளது என்று அதிமுக மேலிடம் அறிக்கையே வெளியிட்டுள்ளது.

துரை வைகோ
இதற்கு நடுவில் மதிமுகதான் இதற்கெல்லாம் காரணம் என்று துரைவைகோ தெரிவித்துள்ளார்.. அக்கட்சியின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "காலம் கடந்து கிடைத்த தீர்ப்பாக இருந்தாலும், இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. அவருக்கு கிடைத்த தீர்ப்பு போன்றே, மற்ற 6 பேருக்கும் கிடைக்க வேண்டும்..

எடப்பாடி பழனிசாமி
பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய பங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உள்ளது.. உச்சநீதிமன்றம் ஒரு சவுக்கடி போல் தீர்ப்பு அளித்துள்ளது.. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி.. இந்த தீர்ப்புக்கு விதை போட்டது நாங்கள்.. தண்ணீர் விட்டது நாங்கள்.. களையெடுத்தது நாங்கள்.. ஆனால் வேறு யாரோ அறுவடை செய்கிறார்கள்... அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.. வைகோ தன் கடமையை செய்துள்ளார்.

எடப்பாடி
ஆனால், இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதிலளிக்கவில்லை.. ஏன் அமைதியாக இருக்கிறார்? அதிமுக ஆட்சி காலத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு சட்ட போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.. அதை நாம் மறுக்க முடியாது.. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த தீர்ப்பு குறித்து மாற்றுக்கருத்து சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது-. அதனால் அவருக்கு அவதூறு அண்ணாமலை என்று பெயர் வைத்திருக்கிறேன் நான்" என்றார்.