சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says

    சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றது இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாளாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை முடிவடைந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. நள்ளிரவுக்குள் யார் அதிபர் என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாயின.

    மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கோத்தபய ராஜ்பக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது.

    அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?

    சிங்களர்கள்

    சிங்களர்கள்

    அதில் தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் அபாரமாக வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு தமிழர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அவருக்கு சிங்களர்களின் ஆதரவே அதிகமாக இருந்தது.

    அதிபர் தேர்தல்

    அதிபர் தேர்தல்

    இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்ட சஜித், கோத்தபயவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் கவலையளிக்கிறது.

    இந்திய அரசு

    இந்திய அரசு

    கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காத, சஜித்துக்கு வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோத்தபய ராஜ்பக்சே வெற்றிக்கு பிறகு இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்களை இந்திய அரசு காக்க வேண்டும்.

    தமிழ் மக்கள்

    தமிழ் மக்கள்

    கோத்தபய வெற்றி பெற்ற நாளான இன்று இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் ஆகும். இலங்கையில் நடைபெற்ற படுகொலைக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும். இறுதிப் போரில் காணாணல் போன லட்சக்கணக்கான மக்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றார்.

    English summary
    MDMK General Secretary Vaiko says that today is the black day in Srilankan history as Kothapaya Rajapakshe won in Presidential election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X