• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அப்டி போடு".. அன்னைக்கு வைகோ ஒரு சபதம் போட்டாரே.. ஞாபகம் இருக்கா.. அது இப்போ நடக்க போகுது..!

Google Oneindia Tamil News

சென்னை: 6 சீட்டில் 4 இடங்களில் மதிமுக வெற்றி பெற்றுள்ளது.. இதனால், மறுமலர்ச்சி திமுக புத்துணர்ச்சி பெற்று வருகிறது.. அந்த கட்சி தொண்டர்கள் பெரும் பூரிப்பில் உள்ளனர்.. அத்துடன் அன்று வைகோ போட்ட சபதமும் நிறைவேறி உள்ளது..!

இந்த முறை வைகோவுக்கு 6 சீட்கள் தரப்பட்டன.. இதனால் விசிகவுக்கு கொஞ்சம் வருத்தம் என்று சொன்னார்கள்.. ஆனாலும் வைகோ மீது திமுக தலைவருக்கு இயல்பாகவே மரியாதை இருந்தது..

வைகோவுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்குவது நியாயமானதே என்று சொல்லிதான் இந்த 6 சீட்களை ஸ்டாலின் ஒதுக்கியிருந்தார். இப்போது 4 இடங்களில் மதிமுக வெற்றி பெற்றுள்ளது..!

எப்பத்தான் கைய நீட்டுவாங்க.. காத்திருக்கும் நாய்கள்.. சைகை காட்டியதும் பாய்ச்சல்தான்எப்பத்தான் கைய நீட்டுவாங்க.. காத்திருக்கும் நாய்கள்.. சைகை காட்டியதும் பாய்ச்சல்தான்

 விமர்சனம்

விமர்சனம்

இந்த வெற்றி மூலம் 2 விஷயங்கள் நடந்துள்ளன.. ஒன்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தந்து, நிலவி வந்த அரசியல் சென்ட்டிமென்ட்டுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வைகோ.. மற்றொன்று "முக ஸ்டாலினை முதல்வர் ஆக்கி காட்டுவேன்" என்று அன்று போட்ட சபதம் இப்போது நிறைவேற போகிறது..!

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

வைகோவை குறித்து ஏராளமான மீம்ஸ்கள் கடந்த 5 வருடங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது.. இந்த இளைஞர்களுக்கு மீம்ஸ்களை ரெடி செய்து அதை ட்ரோல் செய்வதால் ஒரு சிற்றின்பம் கிடைக்கலாம்.. ஆனால் அதேசமயம், வைகோ யார் என்பதையும் இந்த கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.. எப்படி தமிழிசையின் மதிப்பு தெரியாமல் அவரை சீண்டி மீம்ஸ் போட்டு விளையாடினார்களோ, அப்படியேதான் வைகோவையும் கிண்டல் செய்து வருகினறனர்.

 இலக்கியவாதி

இலக்கியவாதி

வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியவாதி.. உலக வரலாற்றை கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்.. தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக வைகோதான் நிற்பார்.. தமிழ் வளத்துக்கு ஒரு களங்கம் என்றால், அங்கேயும் வைகோதான் கெத்துடன் நிற்பார்.. இதற்காக அவர் செய்த போராட்டங்கள் ஏராளம்..இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ஏராளம்..

 சிறை வாசம்

சிறை வாசம்

அவைகளில் சில வழக்குகளை வைகோவே நேரில் ஆஜராகி வாதாடவும் செய்வார்.. அதேசமயம், மக்களுக்காக சிறை செல்லவும் அஞ்சாதவர்.. தமிழக அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட காரணமாக இருந்தே வைகோ எடுத்த போராட்டங்கள்தான்.. ஆனால், ஆலையிடம் பணம் வாங்கிகொண்டார் என்று இதே வைகோமீது புழுதிவாரி தூற்றிய கதையும் இந்த தமிழகத்தில் நடந்தது. வைகோ நினைத்திருந்தால், எவ்வளவோ பணத்தை சம்பாதித்திருக்க முடியும்.. எனினும், அப்படி ஒரு மலிவான செயலை செய்யாதவர் வைகோ.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால், வைகோவை நம்பி வந்தவர்கள் பலர் காணாமல் போய்விட்டதாகவும், அவரது ராசி அப்படி என்று ஏகத்துக்கும் இவரை விமர்சித்தவர்கள் உண்டு.. இதற்கு உதாரணமாக 2016 தேர்தலையும் சொல்லி வருகின்றனர்.. அதைதான் இன்று வைகோ சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார்.. அன்றைய தினம், திமுகவுக்கும் கருணாநிதிக்கும் பெரும் உதவியாக பணியாற்றிவர் வைகோ.

 பேச்சாளர்

பேச்சாளர்

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளராக மறைந்த தா.பாண்டியனுக்கு அடுத்து வைகோ உருவானார்.. திமுக பொதுக்கூட்டங்களில் வைகோ பேசினால், அக்கட்சி தொண்டர்களுக்கு ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டுவிடும்.. ஆனால், யாருக்கு எதிராக கட்சி துவக்கினாரோ, அதே திமுகவில் கூட்டணி வைக்கும் நிலைமைக்கு ஆளானார்.. அப்படி இருந்தும், ஸ்டாலினை முதல்வராக்காமல்விட மாட்டேன் என்று சூளுரைத்தார்.. அதன்படியே, தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரங்களுக்கு சென்று வந்தார்..

 சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

இன்று திமுகவின் வெற்றிக்கு மட்டுமல்லாமல், மதிமுகவுக்கே ஒரு புது பொலிவு ஏற்பட்டுள்ளது.. தன் மீதான சென்டிமென்ட்டை வைகோ உடைத்துள்ளார்.. இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக இடம்பெற்ற கூட்டணி வெற்றி பெற்றது இல்லை என்ற சென்டிமெண்ட்டையும் சேர்த்தே நொறுக்கி உள்ளார்.. மதிமுகவின் எதிர்காலம் இனி ஏறுநடையில் இருக்கும் என்றாலும், "தமிழர் நலன்" என்ற விஷயத்தில் எப்போதுமே வைகோ ஒரு அரணாகவே நின்று காப்பார் என்பதில் சந்தேகமில்லை..!

English summary
MDMK Leader Vaiko breaks all the sentiments which was created on him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X