சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரிசு அரசியல் நடத்தவில்லை.. ஜனநாயக முறையில் எனது மகன் துரை வையாபுரி பதவிக்கு வந்தார்- வைகோ விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நான் வலதுசாரி சிந்தாத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் வாரிசு அரசியல் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 20ம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதன் அடிப்படையில் வைகோ மகன் துரை வையாபுரி தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள் விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துரை வையாபுரி தலைமை கழக செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.

ஸ்டாலினுடன் சந்திப்பு

ஸ்டாலினுடன் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினை துரை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதிகாரப்பூர்வமாக பதவியேற்றபின் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஜனநாயக முறை

ஜனநாயக முறை

வாழ்த்து பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது: ஜனநாயக முறைப்படி துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. 106 பேர் வாக்களித்து அதில் 104 பேர் துரை வைகோ அவர்களை செயலாளராக வரவேண்டுமென தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தான் இவர் செயலாளராக ஜனநாயக முறைப்படி பதவி ஏற்றார். என் மகன் என்பதற்காக நான் திணிக்கவும் இல்லை.

இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைகோ மகன் துரை வைகோ பேசியதாவது, பெரியாரும், பெருமாளும் ஒன்று என நான் தெரிவித்தது, பெரியாரால் தான் நாம் இன்று அனைவரும் கோயில் உள்ளே செல்ல முடிகிறது. அதை மனதில் வைத்து அப்படி சொன்னேன். அதே போல் நான் இறை நம்பிக்கை உடையவன் தான்.

Recommended Video

    அரசியலில் சவால் நிறைந்த பயணம் காத்து கொண்டிருக்கிறது... துரை வைகோ பேச்சு!
    வலதுசாரி

    வலதுசாரி

    நான் வலதுசாரி சிந்தாத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன்.
    மதிமுகவின் தலைமை கழக செயலாளராக என்ன பணிகள் என்பதை பிறகு சொல்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

    English summary
    I will carry out the politics of uniting all against the right wing ideology, said the General Secretary of MDMK, Vaiko. He also said the heir was not doing dynastic politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X