சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit shah says that Hindi should be the only one language in India

    சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை திணிக்க முயற்சிப்பதன் மூலம், தேன்கூட்டில் கைவைத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

    நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைகோ இன்று நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    mdmk leader vaiko warns home minister Amit Shahs Hindi imposition

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, இந்தி திணிப்பு முயற்சியை முறியடிப்போம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நாங்களும் திமுகவும் கூட அதே முடிவையே எடுத்துள்ளோம்.

    அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!

    இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படவேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை திணிக்க முயற்சிப்பதன் மூலம், தேன்கூட்டில் கைவைத்து விட்டார். குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டிலேயே பேனர் வைக்கக்கூடாது என அறிவித்து அதனை செயல்படுத்திய கட்சி மதிமுகதான்" இவ்வாறு கூறினார்.

    English summary
    mdmk leader vaiko warns home minister Amit Shah's Hindi implementation, he said Shah Hands on honeycomb
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X