சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் "சிங்கம்"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்!

கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிட போகிறாரா என்பது தெரியவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதிமுகவுக்கு 2 சீட், திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்- வீடியோ

    சென்னை: ஒரு பக்கம் ஏகப்பட்ட சந்தோஷம், மறுபக்கம் சொல்லமுடியாத தர்மசங்கடத்தில் உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

    எப்படியாவது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று முழக்கமிட்டு வந்த வைகோவுக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு சம்பந்தமாக இழுபறி நீடித்து கடைசியில் நேற்றுதான் எல்லாம் கைகூடி வந்தது.

    இதனால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் வைகோ! இப்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைகோ மாநிலங்களவை எம்பியாக போகிறார். அதுவும் ஸ்டாலினால் இது நடக்கிறது. முன்பு ஒருகாலத்தில் திமுகவில் இருந்தபோதுதான் அவர் எம்பி வாய்ப்பை பெற்றார்.

    "பார்லிமென்ட் ஆப் டைகர்

    பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபட்டு "பார்லிமென்ட் ஆப் டைகர்" என்று புகழப்பட்டவர்தான் வைகோ. இப்போது மீண்டும் அதே திமுகவால்தான் எம்பியாக உள்ளார் என்பதை நினைத்து தொண்டர்கள் ஏக குஷியில் உள்ளனர். ஆனால் மற்றொரு பக்கம் சின்னம்தான் கேள்வியாக இருக்கிறது. இதே நிலைதான் திருமாவளவனுக்கும். இருவருமே தங்களுக்கென ஒரு கட்சியை வளர்த்து தனித்தனி கொள்கைகள் மற்றும் சின்னம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

    ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சின்னம்

    சின்னம்

    ஆனால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதும், கொஞ்சம் ஷாக்தான் ஆனார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கட்சி என்னவாது? கட்சி கொள்கைகள் என்னாவது? நிர்வாகிகள் என்ன நினைப்பார்கள்? சீட்டு கிடைக்கிறதே என்று போய்விட்டால் இவ்வளவு நாள் கட்சியை வளர்த்து வந்ததன் அர்த்தம் என்ன என்றெல்லாம் யோசிக்க துவங்கி உள்ளனர்.

     5 வருட எம்பி

    5 வருட எம்பி

    ஏனென்றால் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகவே ஆனாலும் அவர் திமுகவின் எம்பியாகத்தான் இருப்பார். அதுவும் 5 வருஷத்துக்கு! இதற்கு நடுவில் எதுவுமே யாராலும் செய்ய முடியாது. இதுதான் இப்போது சிக்கல்.

     சின்னம் சிக்கல்

    சின்னம் சிக்கல்

    தனிப்பட்ட முறையில் இதற்கு கருத்து சொல்ல முடியாது. அதனால் நிர்வாகிகளை கலந்தாலோசித்துதான் வைகோ முடிவு எடுப்பார் என தெரிகிறது. நேற்றுகூட செய்தியாளர்கள், உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுமா என கேட்டதற்கு, "போட்டியிடும் சின்னம் குறித்து தற்போது கூற முடியாது" என்று சொன்னார். ஒருவேளை உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிட நேருமா என தெரியவில்லை.

     27 வருடங்கள்

    27 வருடங்கள்

    ஆனால் கடந்த 27 வருஷத்துக்கு முன்னால் யாரால், எந்த கட்சியை விட்டு வெளியேறினாரோ, இன்று அதே கட்சியில் சம்பந்தப்பட்டவராலேயே சீட் வாங்கி கொண்டு, உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டி வருகிறதே என்று மதிமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.

    English summary
    MDMK President Vaiko contest in MP Election with DMK Symbol?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X