சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு.. இன்று நடந்தது.. நாடு முழுவதும் 15.19 லட்சம் பேர் தேர்வெழுதினர்!

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடந்தது.

மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்காக இருந்த பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் முறை மாற்றப்பட்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்ஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. இந்த நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது. 5 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் இருந்தது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

சென்னையில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். சென்னையில் மட்டும் 31 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 35 மாணவர்கள் தேர்வெழுதுனார்கள். ஃபனி புயல் காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வு நடக்கவில்லை.

நீட் எத்தனை

நீட் எத்தனை

நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடத்தை விட இது மிக அதிகம் ஆகும். சென்ற முறையை விட இந்த முறை 2 லட்சம் மாணவர்கள் அதிகாக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மதுரையில் எத்தனை

மதுரையில் எத்தனை

மதுரையிலும் இந்த முறை அதிக பேர் தேர்வெழுதினர். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதினார்கள். அதேபோல் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சுமார் 19 ஆயிரம் 638 மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதினார்கள்.

English summary
Medical Entrance NEET exam held today all over India: More than 15 lakh students will face the exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X