சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று நாடு முழுக்க நீட் தேர்வு.. கடுமையான ரூல்ஸ்.. மாணவர்களிடம் கடும் கெடுபிடி

Google Oneindia Tamil News

சென்னை: இன்று நாடு முழுவதும் நடக்கும் நீட் தேர்விற்காக நிறைய விதிகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுக்க இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறியும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

Medical Entrance NEET exam: Students have to follow the following rules and regulations

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் உள்ளது. நாடு முழுக்க 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

உடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு! உடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு!

இந்த தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பின் வரும் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி,

  • தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் எலக்ட்ரானிக் சாதனம் எதையும் எடுத்து செல்ல கூடாது.
  • அணிகலன்கள், உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல கூடாது.
  • எழுது பொருட்களை எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுத தேவையான பேனா தேர்வறையில் அளிக்கப்படும்.
  • பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் முழுக்கை உடை அணிய கூடாது.
  • ஷூ அணிந்து வரக்கூடாது.
  • முகத்தை மூடும் படி உடைகளை உடுத்த கூடாது.
  • தண்ணீர் கேன் கொண்டு செல்ல கூடாது.
  • தமிழ் கேள்வித்தாளில் தவறு இருந்தால் ஆங்கில கேள்வித்தாளை படித்து புரிந்து கொள்ள வேண்டும், என்று நிறைய விதிகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
English summary
Medical Entrance NEET exam: Students have to follow the following rules and regulations to write the exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X