சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 9 மிமீ போதும்.. 200 ஆண்டில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக வரலாறு படைக்கும் "மீனா".. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் 9 மி.மீ. மழை பெய்தால் போதும் 200 ஆண்டுகளில் முதல்முறையாக பெரிய வரலாற்றை மீனம்பாக்கம் படைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    200 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைக்கப்போகும் சென்னை

    இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய மழை தமிழகத்தில் பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிதான ஒன்று.

    எனவே மகிழ்ச்சியாக இருங்கள். வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் அருகே உள்ளதால் பருவகாற்றை மறுபக்கத்தில் இருந்து இழுக்கிறது. இதனால் கேரளா, வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும்.

    13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி

    வால்பாறை

    வால்பாறை

    குறிப்பாக இடுக்கி, வால்பாறை, வயநாடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக மிக அதிகமான கனமழை கொட்டி தீர்க்கும். மீனம்பாக்கத்தில் இந்த ஜூலை மாதத்தில் இதுவரை 291 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் 9 மி.மீ. மழை பெய்துவிட்டால் போதும். 300 மி.மீ. ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டால் புதிய வரலாறு படைக்கலாம்.

    பேய் மழை

    பேய் மழை

    அதாவது ஜூலை மாதத்தில் 200 ஆண்டுகளில் முதல்முறையாக 300 மி.மீ. மழை பொழிவை பெற்றுவிட்டோம் என்ற வரலாற்றுச் சாதனையை படைப்போம். இது போல் பேய் மழையை பார்க்க இன்னும் பல நூறாண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். சென்னையில் கடந்த 1818ஆம் ஆண்டு ஜூலை மாதம் 299 மி.மீ மழை பெய்தது.

    மீனம்பாக்கம்

    மீனம்பாக்கம்

    அதன் பின்னர் இன்று காலை 5.30 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 291 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுங்கம்பாக்கத்தில் 270 மி.மீ. மழை பெய்தது. அது போல் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 266 மி.மீ. மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலில் இருந்து மாநகருக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்ததால் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதியும் மழை பெய்துள்ளது.

    நுங்கம்பாக்கம்

    நுங்கம்பாக்கம்

    சென்னையில் இதுவரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழைகளை பார்ப்போம். கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 104 மி.மீ, மீனம்பாக்கத்தில் 95 மி.மீ. மழையும், செப்டம்பர் 9, 2017-ஆம் ஆண்டும், 2014-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி மீனம்பாக்கத்தில் 52 மி.மீ மழையும், செப்டம்பர் 9, 2013, ஆகஸ்ட் 14- 2013, ஆகஸ்ட் 20- 2010, ஜூலை 29- 2007 ஆகிய தேதிகளில் மழை பெய்துள்ளது.

    English summary
    Tamilnadu Weatherman says that Meenambakkam July record for 300 mm in July – 9 mm required to cross 300 mm for 1st time in 200 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X