சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிளம்பி வாங்க".. மோப்பம் பிடித்த டீம்.. "மெகா புள்ளி"க்கு திமுக தூண்டிலா? அதிரும் எடப்பாடி டீம்

முன்னாள் அமைச்சர் ஒருவரை திமுக பக்கம் இழுக்க முயற்சி நடக்கிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் கோட்டையான கொங்குவில், நாளுக்கு நாள் திமுகவின் பலம் கூடிவரும் நிலையில், அதை மேலும் வலுப்படுத்த ஆளும் தரப்பு முயன்று வருகிறது.. எம்பி தேர்தலில் மொத்த கொங்குவையும் அள்ளுவதற்கு பிளான்கள் போடப்பட்டு வரும்நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, கடந்த 2 தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.. அதன்மூலம் கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறிவிட்டது..

எனவே, இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலேயே எடப்பாடி தரப்பு பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க துவங்கிவிட்டது என்கிறார்கள்..

பெரிய குழப்பத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்.. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே.. கே.பி.முனுசாமி நம்பிக்கை!பெரிய குழப்பத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்.. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே.. கே.பி.முனுசாமி நம்பிக்கை!

சவால்கள்

சவால்கள்

ஆனால், எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பிலேயே 2விதமான டீம்கள் உள்ளதுதான் மிகப்பெரிய தர்மசங்கடமாக எடப்பாடிக்கு நிற்கிறதாம். ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், கொங்கிலுள்ள சில சீனியர்கள், பாஜகவுக்கான ஆதரவு அலையை வீசிவருவதாக தகவல்கள் கசிந்தன. அதற்கேற்றவாறு, இதுவரை பாஜகவை எதிர்த்து இவர்கள் எந்த ஒரு பேட்டியையும் தராமல் உள்ளதையும் எடப்பாடி பழனிசாமி கவனிக்காமல் இல்லை.. மேலும், கூட்டணி உறவு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதும் உறுதியாகவில்லை..

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உட்பட பல தலைவர்கள் சொல்லி வந்தாலும், எடப்பாடி தரப்பில் யாரும் இவ்வாறு பேட்டிகளை தரவில்லை.. எனவே, எம்பி தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது இழுபறியாகவே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு முக்கிய தகவல் கசிந்து வருகிறது.. கடந்த ஒரு வருட காலமாகவே, கொங்கு மண்டல, மாஜி அமைச்சர் ஒருவருக்கான முக்கியத்துவத்தை வெகுவாக குறைத்து விட்டாராம் எடப்பாடி பழனிசாமி..

 நொந்த மாஜி அமைச்சர்

நொந்த மாஜி அமைச்சர்

இது மாஜி அமைச்சருக்கு பெருத்த வேதனையை உண்டுபண்ணி வருவதால், தன்னுடைய ஆதரவாளர்களிடமும் மனம்விட்டுப் புலம்பி வருகிறாராம்... கட்சி நிர்வாகிகள் நியமனம் என்றாலும்கூட, முன்பெல்லாம் கருத்து கேட்பாராம் எடப்பாடி.. ஆனால், இப்போது சொந்த மாவட்டமான "முட்டை புகழ்" மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில்கூட பரிந்துரைகள் சிலவற்றை புறந்தள்ளி வைத்துவிட்டாராம் எடப்பாடி.. இதையெல்லாம் ஆதரவாளர்களிடம் சொல்லி நொந்து போகிறாராம் அந்த மாஜி.. அதனால்தான், பொங்கல் பண்டிகையின்போது எடப்பாடியை வழக்கமாக சந்திப்பதைக்கூட அவரும் அவரது ஆதரவாளர்களும் தவிர்த்துவிட்டதாக சொல்கிறார்கள்...

தூண்டில் வலை

தூண்டில் வலை

இந்த விஷயத்தைதான், செந்தில்பாலாஜி தரப்பு மோப்பம் பிடித்துவிட்டதாம்.. நடப்பதையெல்லாம் நோட்டம் பார்த்த நிலையில், மாஜி தரப்பில் இருக்கும் முக்கிய புள்ளிகளை, திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ளதாம் செந்தில் பாலாஜி டீம்.. அதுமட்டுமல்ல, மாஜியையே தங்கள் பக்கம் இழுக்கவும், முயன்று வருகிறதாம்.. அந்த மாஜி அமைச்சர் திமுக பக்கம் வந்தால், அவருக்குரிய பொறுப்பு உட்பட அனைத்துக்கும் உத்தரவாதம் என்பதுபோல், செந்தில் பாலாஜி டீம் தூண்டில் போட தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.. எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு வலையை விரிப்பது என்பது இயல்பாக நடக்ககூடிய சம்பவம்தான் என்றாலும், இவ்வளவு நாள் திமுகவிற்கு எதிராக முறுக்கு காட்டிய மாஜி இதற்கெல்லாம் ஒப்புக்கொள்வாரா? என்பதே கேள்வி.

 பதறிய மாஜி

பதறிய மாஜி

அதிமுக கூடாரத்தை காலி செய்து, விசுவாசிகளை திமுகவுக்கு இழுப்பதில் கவனமாகவும் கச்சிதமாகவும் கடந்த ஒரு வருட காலமாகவே செயல்பட்டு வருகிறார் செந்தில் பாலாஜி... முக்கியமாக கொங்குவைச் சேர்ந்த மற்றொரு சீனியர் அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களை நோக்கி அதிகம் காய்நகர்த்தப்படுவதாக தெரிகிறது... மாஜி அமைச்சர் இதன் மூலம் பலவீனப்படுவார் என்பதோடு மட்டுமில்லாமல், அவர் மீது போடப்பட்டுள்ள பல வழக்குகளுக்கும் இதன் மூலம் பலம் கிடைக்கும் என்பதே பலே பிளானாக உள்ளது.. செந்தில் பாலாஜியின் இந்த திட்டத்தால் மாஜி பதறிப்போயிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வட்டமடித்தாலும், இப்போது, இன்னொரு மாஜிக்கு கொக்கி போட முயல்வதாக தகவல்கள் கசிந்து வருவது, எடப்பாடி தரப்பையே அதிர வைத்து வருகிறதாம்.

English summary
Mega Stroke and Is Senthil Balaji trying to bring Ex Minister to DMK, says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X