சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்

ராஜேந்திர பாலாஜியின் கருத்தினை நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ADMK Meeting: நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை விதித்த அதிமுக தலைமை- வீடியோ

    சென்னை: நடிகர் மனோபாலா ஒரு படத்தில் சொல்லுவாரே.. "பொழப்பு சிரிப்பா சிரிச்சிட போகுதுன்னு" அப்படி ஆகிவிடுமோ தெரியவில்லை தமிழக அரசியல் நிலவரம்!

    இன்று காலை அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஒற்றை தலைமைக்கு யாரை தேர்ந்தெடுக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

    Meme about Minister Rajendra Balajis opinion about AIADMK Meeting

    குறிப்பாக, ஓ பன்னீர்செல்வமா, எடப்பாடியா, இவர்களில் யார் அந்த ஒற்றை என்பதே பெரிய கேள்வியாக எழுந்தது. அதனால் காலை 10 மணிக்கு கூட்டம் என்றால் அதற்கு முன்பேயே பரபரப்பு தொத்தி கொண்டது.

    இது போதாதென்று, அதிமுக கூட்டமே தொடங்காத நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக என்ற போஸ்டரும், பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என்ற போஸ்டரும் மேலும் நம்மை கதி கலங்க வைத்துவிட்டன. அந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடந்தாலும், உள்ளே என்ன பேசுவார்களோ என்று லேசான பிரஷரும் எகிறியது.

    Meme about Minister Rajendra Balajis opinion about AIADMK Meeting

    ஆனால் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்து சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை.. அதில் எல்லா எதிர்பார்ப்புமே பஞ்சு பஞ்சாய் பறந்து போய்விட்டது. கூட்டத்தில் என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்க, "சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம்" என்றார்.

    இதைதான் நெட்டிசன்கள் வைத்து ஓட்டி வருகிறார்கள். சிரித்து கொண்டே போனோம், வந்தோம் என்ற கருத்துக்கு, "மக்களும் சிரித்து கொண்டேதான் இருந்தனர்" என்று ட்வீட் போட்ட கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது, சீரியஸான கட்சியாக இருந்த அதிமுக, இப்போது மக்கள் சிரிக்கும்படி கொண்டு போய்விட்டார்களே என்று கலாய்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

    English summary
    Memes are viral in Social media about Minister Rajendra balajis comment on AIADMK Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X