சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குள்ளம் குள்ளம் என்று மீம் போட்டு கிண்டலடித்தார்கள்.. இப்போது பாருங்கள்.. உருக்கமாக பேசிய தமிழிசை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானா ஆளுநராக நியமணம்... தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள்

    சென்னை: தன்னை குள்ளம் என்று கூறி பலர் மீம் போட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.

    தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

    சென்னை சிட்டிசன் போரம் மற்றும் தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பாக இந்த விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் மிகவும் உருக்கமாக பேசினார்.

    மீம் எப்படி

    மீம் எப்படி

    தமிழிசை சௌந்தரராஜன் தனது பேச்சில், மீம் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்து தோற்றுவிட்டனர். நான் குள்ளமாக இருப்பதை பலமுறை விமர்சித்தனர். நிறைய மீம்கள் போட்டனர். ஆனால் நான் ஒருமுறை கூட அதற்காக கவலை கொள்ளவில்லை. நாம் எப்படி இருந்தாலும் கவலைப்பட கூடாது.

    கவலை கூடாது

    கவலை கூடாது

    நாம் ஒல்லியாக இருந்தாலும் சப்பையாக இருந்தாலும் அதற்காக வருத்தப்பட கூடாது. நாம் எல்லா விஷயங்களிலும் நேர்மறையாக பயணிக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை கூட நேர் மறையாக அணுக வேண்டும்.

    பெண்

    பெண்

    நான் சாதிக்கவில்லை, சாதாரண ஒரு பெண், எனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்தேன். திமிங்கலங்கள் இல்லாத கடலில் எனக்கு நீந்த பிடிக்காது. திமிங்கலங்கள் இருந்தால் தான் பிடிக்கும். அதுபோன்று தான் அரசியல், நான் ஆளுநர் இல்லை சாதாரண ஒரு பெண்

    பெண்கள்

    பெண்கள்

    அரசியலில் பெண்கள் பயணிப்பது கடினம். அதிலும் அப்பாவின் பாதைக்கு எதிராக செல்வது என்பது மிகவும் கடினம். அப்பாவின் வழியில் நான் செல்லவில்லை. அப்பாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் ரணப்பட்டு போய் இருக்கிறேன்.

    அப்பா என்ன சொல்வார்

    அப்பா என்ன சொல்வார்

    கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். நான் கண்டதை படித்தேன். இப்போது ஆளுநர் ஆகி இருக்கிறேன். பெண்கள் அதிகமாக மக்கள் சேவையாற்ற வேண்டும். அரசியலில் பெண்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்.

    மக்கள்

    மக்கள்

    மேதகு என்பதை விட பாசமிகு என்று அழைப்பதையே விரும்புகிறேன். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன். அந்த எண்ணம் எனக்கும் எப்போதும் உண்டு. நான் தொடர்ந்து மக்களுக்கு எனது சேவையை தொடர்வேன், என்று கூறியுள்ளார் .

    English summary
    Meme creators trolled my height but I never felt sad about it says Tamilisai Soundararajan in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X