சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Newsmakers 2018: காரணங்கள் பல.. பாடம் ஒன்றுதான்.. வலுவுள்ளவனே பிழைப்பான்.. எஸ்.வி.சேகர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    2018-ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர்களுள் ஒருவர் எஸ்.வி.சேகர்- வீடியோ

    சென்னை: 2018-ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர்களுள் எஸ்.வி.சேகரும் ஒருவர்.

    "ஒரு பெண் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்றால் முக்கிய நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும்" என்ற கருத்தை இவர் பார்வர்ட் பண்ணப் போய் தமிழகமே டென்ஷன் ஆனது.

    வேலைக்கு போகும் பெண்கள் என்றாலே இப்படித்தான், பதவி உயர்வுக்காக இப்படித்தான் செயல்படுவார்கள் என்ற தவறான புரிதலே இது போன்ற கேடு கெட்ட எண்ணத்தை எஸ்.வி.சேகரிடமிருந்து மனதில் துளிர்த்து வாய்மொழியாக உதிர்க்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    பெண் பத்திரிகையாளர்
    தேடப்பட்டார்

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஹைகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் மனுத்தாக்கல் செய்தும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தடை இல்லை

    தடை இல்லை

    காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார் என செய்திகள் வலம்வந்தன. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அவரை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என்று சொல்லியும் போலீசாரின் துணையுடன் அவர் சென்னையை வலம் வந்து கொண்டிருந்தார்.

    போலீசுக்கு சவால்

    போலீசுக்கு சவால்

    நிறைய விழாக்களிலும் எஸ்.வி,சேகர் பகிரங்கமாகவே கலந்து கொண்டார். அது மட்டும் இல்லை, "நான் எங்கும் ஓடிச்சென்று ஒளியவில்லை, தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும். நான் சென்னையில் தான் இருக்கிறேன் " என்று சவால் விடுத்தார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    ஆனால் கடைசியில் எஸ்.வி.சேகர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தே விட்டார். பாஜகவில் இருந்ததால்தான் அவர் மீது கைது நடவடிக்கை இல்லாமல் போனது என பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டது.

    மறக்க முடியாது

    மறக்க முடியாது

    உச்சநீதிமன்ற நீதிபதிகளே கதறி கொண்டு வீதியில் வந்து முறையிடும் நிலையில் உள்ளபோது, பாசிச சக்திகளின் பிடியில் உள்ள எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனத்தை தவிர வேறெதுவும் சொல்ல முடியாமல் போனது 2018-ம் ஆண்டின் முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது.

    English summary
    Case against S.Ve. Sekar and Memorable actions of in this year 2018
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X