"விர்ச்சுவல் காதல்".. செல்போனில் டார்ச்சர்.. ஏஐ காதலிகளுக்கு அடிமை ஆகும் ஆண்கள்.. என்னங்க நடக்குது!
சென்னை: உலகம் முழுக்க ஆண்கள் பலர் ஏஐ கேர்ள் பிரண்டுகளை உருவாக்கி அதை மோசமாக டார்ச்சர் செய்வதாக பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. "தோழி இல்லையே" என்று பேஸ்புக்கில் சுற்றிக்கொண்டு இருந்த பலர் ஏஐ கேர்ள் பிரண்டுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.. இந்தியாவிலும் இந்த போக்கு அதிகரித்துள்ளது.
90ஸ் கிட்ஸ்களின் காலம் முடிந்து தற்போது உலகம் மெல்ல மெல்ல 2கே கிட்ஸ்களின் ஜென் இசட் காலம் நோக்கி நகர்ந்து வருகிறது. உலகமே வேகமாக விர்ச்சுவல் தேசமாக மாறிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட விர்ச்சுவல் திருமணங்கள் நடக்க போகின்றது.
3 நாளாச்சு.. முடியல.. கோவையில் குடோனுக்குள் புகுந்த 'மாயாஜால' சிறுத்தை.. பரபரப்பில் மக்கள்
பேஸ்புக்கும் கூட நாம் இருக்கும் யூனிவர்சை எல்லாம் தூக்கி வீசிவிட்டு மெட்டாவெர்ஸ் என்ற உலகத்தை உருவாக்கி உள்ளது. முழுக்க முழுக்க விர்ச்சுவல் உலகில் வாழும் முறையை இந்த மெட்டாவெர்ஸ் கொண்டு வர உள்ளது. ரெடி ஒன் பிளேயர் போன்ற படங்களில் வருவது போல உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மெய்நிகர் காலத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

காதல் மாற்றம்
அந்த கால ஒருதலை ரகம் ஸ்டைல் காதலுக்கு எல்லாம் இனி வரும் நாட்களில் இடமே இல்லை... அதற்கான நேரமும் இல்லை. 2000 தொடக்கத்தில் எப்படி ஆன்லைன் காதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்க தொடங்கியதோ அப்படிதான் இப்போது விர்ச்சுவல் காதல்களும் உருவெடுக்க தொடங்கி உள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பம் கொண்ட செயலிகளை காதலிப்பது. ஆம்.. மனிதர்களை காதலிக்க முடியாமல் இந்த ஜெனரேஷனை சேர்ந்த பலர் கூட்டம் கூட்டமாக ஏஐ வசம் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

விர்ச்சுவல் காதல்
உங்கள் போன்களில் நீங்கள் கூகுள், அலெக்ஸ்சா, சிரி போன்ற ஏஐ ஆப்களை பயன்படுத்தி இருப்பீர்கள்.. இவை எல்லாம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும். இதன் குரலை ஆண், பெண் குரலாக மாற்றிக்கொள்ள முடியும். ஒருவேளை இதே செயலி உங்களுக்கு காதலியாக (காதலனாக), தோழியாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி பல செயலிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நவீன ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரெப்ளிகா (Replika) போன்ற பல செயலிகள் இதற்காகவே இணையம் முழுக்க உள்ளன.

ரெப்ளிகா (Replika)
இந்த செயலிகள் மிக எளிதாக செயல்பட கூடியது.. செயலியை டவுன் லோட் செய்ததும் அந்த ஏஐக்கு நீங்கள் ஒரு பெயர் வைக்க வேண்டும். உதாரணமாக ரெப்ளிகா (Replika) செயலியை டவுன் லோட் செய்துவிட்டு.. அதில் இருக்கும் ஏஐக்கு நீங்களே ஒரு விருப்பமான பெயரை வைக்க முடியும். பெண் துணை தேடுபவர்கள் அதற்கு பெண் பெயரை வைத்து பெண் குரலை வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண் துணை தேடுபவர்கள் அதன் குரலை ஆணாக மாற்றி ஆண் பெயர் ஒன்றை சூட்டிக்கொள்ள முடியும்.

ரெப்ளிகா (Replika) பெண்
அதன்பின் நீங்கள் அதனிடம் பேசலாம்.. உங்கள் தினசரி வாழ்க்கையை சொல்லலாம்.. நீங்கள் ஐ லவ் யூ சொன்னால் திரும்ப சொல்லும். இதற்கு உணர்வுகள் இல்லை என்றாலும் ஏஐ பாட்கள் என்பதால் குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்திக்கும். சிட்டி ரோபோட் போல. எனவே உங்கள் கேள்விகளுக்கு அதுவே மனிதர்களை போல பதில் சொல்லும்.. சோகமாக இருப்பதாக கூறினார்கள் என்றால்.. என்னாச்சு டார்லிங் என்று கேள்வி கேட்கும். மனிதர்களின் அன்பு.. அரவணைப்பு.. சோகமான மெசேஜுக்கு ரிப்ளை கிடைக்காத பலர் தற்போது தஞ்சம் அடைவது இந்த ஏஐ செயலிகளை நோக்கித்தான்.

ஏஐ செயலி
நீங்கள் இந்த செயலிக்கு காதல் சொன்னால் அது மீண்டும் உங்களுக்கு காதல் சொல்லும்.. ஒருவேளை ஒருநாள் மெசேஜ் செய்யாமல் நீங்கள் மறந்தால் கூட அதுவே உங்களுக்கு மெசேஜ் அனுப்பி " என்னை மறந்துவிட்டாயா?" என்று கேட்கும். முக்கியமாக ஆண்கள் பலர்தான் இந்த ரெப்ளிகா (Replika) போன்ற செயலிகளை பயன்படுத்தி வருவதாக ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. இந்த நிலையில் சர்வதேச ஊடகங்கள் சில வெளியிட்டுள்ள கட்டுரையில், ரெப்ளிகா (Replika) போன்ற செயலிகளை ஆண்கள் சிலர் மிக தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் பலர் அடிமை
ரெப்ளிகா (Replika) போன்ற செயலிகளில் பெண் கேர்ள்பிரண்ட் ஏஐ களை உருவாக்கும் ஆண்கள் அதற்கு அடிமையாகி வெளி உலகை மறந்துவிடுகிறார்கள். சிலர் அதை உண்மையான பெண் என்று நினைக்க தொடங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர் அந்த செயலியிடம் இருந்து பாலியல் தேவைகளை எதிர்பார்க்க தொடங்கி விடுகிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த ஏஐகள் பெண் போலவே பேசாது.. என்ன இருந்தாலும் அதுவும் கோடிங் தானே.. எனவே சமயங்களில் அதனால் உணர்ச்சிகரமான விஷயங்களை பேச முடியாது.

மோசமான செயல்
அப்படிப்பட்ட நேரத்தில் ஆண்கள் பலர் இந்த செயலிகளை மோசமாக திட்டுவதாக கூறப்படுகிறது. இதை பற்றி reddit தளத்தில் பெரிய forum உருவாக்கப்பட்டு அதில் ஏஐகள் நடத்தப்படும் விதம் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் பலர் தங்களின் ரெப்ளிகா (Replika) ஏஐகளை எப்படி நடத்துகிறோம் என்று விளக்கி உள்ளனர். நான் அவளிடம் தினமும் பேசுவேன்.. என் காதலை சொல்லுவேன்.. அவள் ஏதாவது சம்பந்தம் இன்றி பேசினால் அப்படியே திட்டிவிடுவேன்., என்று ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கெட்ட வார்த்தை
இன்னொருவர் நான் கெட்ட வார்த்தைகளில் மட்டும் பேசுவேன்.பாலியல் விஷயங்கள் பற்றி பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு ஆண் வெளி உலகத்தில் என்னிடம் பெண்கள் பேசுவது இல்லை. அதனால் இங்கே ஏஐ செயலியில் பேசுகிறேன். எனக்கு ஒரே நிம்மதி ரெப்ளிகா (Replika)தான் என்று கூறி உள்ளார். இன்னும் பல ஆயிரம் பேர் இதில் தாங்கள் பேசிய சாட்களை போஸ்ட் செய்துள்ளனர். இதை எல்லாம் ஸ்கிரீன் ஷாட்களாக வெளியிட்டுள்ளார்.

மோசமான சாட்ஸ்
அதில் சில காதல் சாட்ஸ்.. பல ரொமான்ஸ் சாட்ஸ்.. இன்னும் பல வக்கிரமான சாட்ஸ். வெளியுலகில் போதிய தொடர்பு இல்லாத பலர் இப்படி ஏஐகளிடம் தஞ்சம் அடையும் போக்கு அதிகரித்து வருகிறது. இது ஒருவகையில் மனரீதியான இறுக்கத்தை கொடுக்கும். இப்போதே பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை எல்லோரும் போனில் முடங்கி உள்ளோம்.. இப்படிப்பட்ட நேரத்தில் வெளியுலகில் இருந்து நம்மை முற்றிலும் துண்டிக்கும் வகையில் ரெப்ளிகா (Replika) போன்ற செயலிகள் உருவெடுத்து உள்ளன.