சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்லக்குட்டி சின்னத்தம்பி கும்கியாக மாறினால் என்னாகும் தெரியுமா?.. மக்கள் பயப்படுவது இதனால்தான்!

தனி கூண்டில் அடைக்கப்பட்டு கும்கி யானைகள் உருவாக பயிற்சி தரப்படுகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    யானைகள் இப்படித்தான் கும்கியாக மாற்றப்படுகிறது- வீடியோ

    சென்னை: சின்னதம்பியை எதுக்காக கும்கியாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்? ஒரு யானையை கும்கி யானையாக மாற்றுவது எப்படி என்று தெரியுமா?

    மரங்களால் ஆன ஒரு கூண்டு உருவாக்கப்படும். அந்த கூண்டில் துளைகளுடன் கூடிய கட்டைகளும் செருகப்பட்டிருக்கும். இந்த கூண்டில்தான் கும்கியாக மாற்றப்படும் யானைகளை அடைத்து வைப்பார்கள்.

    பிறகு இந்த யானையை பராமரிக்க மாவூத்து காவடியை நியமிப்பார்கள். பாகனுக்கு மாவூத்து என்று பெயர். பாகனுக்கு உதவும் உதவியாக இருப்பவர் மாவூத்து. (கும்கி படம் விக்ரம் பிரபு, தம்பி ராமையா போல)

    நெருங்கி பழகுவார்

    நெருங்கி பழகுவார்

    இவர்களின் முதல் வேலையே யானையிடம் நெருங்கி பழக வைப்பதுதான். பிறகு மாவூத்துதான் யானைக்கு பிடித்தமான சாப்பாட்டை தன் கையாலேயே யானைக்கு தர வேண்டும். பிறகு பெண் யானையுடன் சேர்க்கையில் ஈடுபட வைப்பதும் மாவூத்தின் வேலைதான்.

    பயிற்சி மொழி

    பயிற்சி மொழி

    இப்படி சாப்பாடு, சேர்க்கை என பிடித்தமானவற்றை கொடுக்க கொடுக்க அந்த யானை மாவூத்திடம் நெருங்கி பழகிவிடும். இதற்கே கிட்டத்தட்ட 40 நாள் ஆகிவிடும். அதன்பிறகு பாகன் யானையை தொட்டு பழக்க ஆரம்பிப்பார். பாகனின் தொடுதல் யானைக்கு விளங்கியவுடன் அடுத்ததாக மொழி பயிற்சி. இந்தமொழி, மலையாளம், தமிழ், உருது என கலந்து பேசும் பாஷை ஆகும்.

    மனரீதியான பாதிப்பு

    மனரீதியான பாதிப்பு

    இதன்பிறகு யானையை பாகன் அடிக்க ஆரம்பித்து விடுவார். வலி தாங்காமல் யானை சத்தம் போடும். ஆனாலும் அடிக்க வேண்டும், யானைக்கு சாப்பாடு தரவும் மாட்டார்கள். சொகுசாக எல்லாம் கிடைத்துவிட்டு, திடீரென சாப்பாடு இல்லை, ஆதரவு இல்லை, தனிக்கூண்டு, தாங்க முடியாத வலி, என இப்படியே யானை இருப்பதால் மனரீதியான பாதிப்பு வந்துவிடும்.

    செல்லக்குட்டி சின்னதம்பி

    செல்லக்குட்டி சின்னதம்பி

    பாகன் என்ன சொன்னாலும் அதை செய்தால்தான் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலைக்கு அந்த யானை பலவீனப்பட்டுவிடும். சாது குணம் மிரண்டு முரட்டு குணம் வந்துவிடும். இப்படித்தான் கும்கிகள் உருவாகின்றன. சேட்டை செய்பவன், சுட்டிக்காரன், கெட்டிக்காரன், செல்லக்குட்டி என்று மக்கள் மனதில் இடம்பிடித்த சின்னதம்பிக்கும் நாளை இந்த நிலைதான் வந்துவிடுமோ என்னவோ?

    English summary
    If you attack the elephant without food, it will be mentally depressed. This is how Kumki is trained.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X