சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்பிபி சிகிச்சைக்கான பில் தொகை பற்றி பேசவே வேண்டாம் என்று மருத்துவமனை கூறிவிட்டது.. சரண் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, பரவும் வதந்திகள் குறித்து எஸ்.பி.பி சரண் விளக்கம் அளித்துள்ளார். அரசிடம் நிதி உதவி பற்றி பேசியது உண்மைதான் என்று அவர் கூறினார்.

Recommended Video

    SPB சிகிச்சைக்கான பில் தொகை குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்த எஸ். பி. பி. சரண்- வீடியோ

    கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    பாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததும், அதையடுத்து அவர் மரணமடைந்த தகவலும், ரசிகர்களை உலுக்கின.

    72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன் 72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன்

    எஸ்பி பாலசுப்பிரமணியம்

    எஸ்பி பாலசுப்பிரமணியம்

    செப்டம்பர் முதல் வாரத்திலேயே எஸ் பி பாலசுப்ரமணியமுக்கு, கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டதால், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடலை வைக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கியதால், பாலசுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    கட்டணம்

    கட்டணம்

    இதனிடையே எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணமடைந்த தகவலை அவரது மகன் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தாரே தவிர மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. மருத்துவமனை நிர்வாகம் வசூலித்த கட்டணம், சிகிச்சை முறை உள்ளிட்டவை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விமர்சனக் கருத்துக்களை வேகமாக பரவி வருகின்றன.

    பிரஸ் மீட்

    பிரஸ் மீட்

    இது சர்ச்சைகள் தொடர்பாக இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது எஸ்பி பாலசுப்பிரமணியம் மகன் சரண் பங்கேற்று பேட்டியளித்தார். சரண் அளித்த பேட்டியில் கூறியதாவது: தந்தை இறந்த தினத்தில், பணத்தோடு நான் பில் கட்ட வந்திருந்தேன்.

    காசு பற்றி பேச வேண்டாம்

    காசு பற்றி பேச வேண்டாம்

    ஆனால், பில் தொகை செலுத்த வேண்டாம். வீட்டுக்கு சரியான முறையில் பாலசுப்பிரமணியன் உடலை எடுத்துச்செல்ல ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மருத்துவமனை சேர்மன் தெரிவித்துவிட்டார். பிறகு வந்து பில் செலுத்த வேண்டுமா என்று நான் கேட்டேன். ஆனால் காசு விஷயம் பற்றி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன்.

    அரசிடம் உதவி கேட்டேன்

    அரசிடம் உதவி கேட்டேன்

    மருத்துவமனை செலவு விஷயத்தில், அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தது உண்மைதான். நான் தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசி உதவி கேட்டேன். இது நடந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். ஆனால் மருத்துவமனை சேர்மனுடன், அரசு என்ன பேசினார்கள் தெரியாது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்துடன் எனக்கு எந்த பில் பிரச்சினையும் இல்லை. பில் பணம் கொடுத்தால்தான், உடலை எடுத்துச் செல்ல அனுமதி தருவோம் என்று மருத்துவமனை கூறியதாகவும், முன்கூட்டியே எஸ்பிபி பாலசுப்பிரமணியம், மறைந்துவிட்டார் என்றும், பில் பிரச்சினையால், மறுநாள் அறிவித்ததாகவும், வதந்திகள் பரப்பிவிடப்படுகிறது.

    மணிமண்டபம்

    மணிமண்டபம்

    எனது தந்தை மீது உள்ள உங்கள் அன்பால், உங்கள் கோபத்தை யார் மேலாவது காட்டவேண்டும் என்று நினைப்பீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால், அதற்கு இது வழி இல்லை. ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள். எனது தந்தைக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது ஒரு ஆசை. அதற்காக திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனது சக்தியால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு செய்வேன். இப்போதும் எங்களது பண்ணை வீட்டுக்கு, நினைவிடத்தை பார்க்க ரசிகர்கள் ஏராளமாக வருகிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் நடைமுறை ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை உள்ளூர் பஞ்சாயத்து பேசி எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    உதவி

    உதவி

    எனது தந்தை மீது உள்ள உங்கள் அன்பால், உங்கள் கோபத்தை யார் மேலாவது காட்டவேண்டும் என்று நினைப்பீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால், அதற்கு இது வழி இல்லை. ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள். எனது தந்தைக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது ஒரு ஆசை. அதற்காக திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனது சக்தியால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு செய்வேன். இப்போதும் எங்களது பண்ணை வீட்டுக்கு, நினைவிடத்தை பார்க்க ரசிகர்கள் ஏராளமாக வருகிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் நடைமுறை ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை உள்ளூர் பஞ்சாயத்து பேசி எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    English summary
    Chennai MGM hospital authorities will meet the press today, after the criticism on playback singer SP Balasubramaniam's treatment. The singer's son SPB Charan will also participate in the press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X