சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்

மிடாஸ் ஆலை முன்னாள் நிர்வாக இயக்குனர் மோகன் மரணமடைந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களில் ஒருவரும் மிடாஸ் நிறுவன முன்னாள் நிறுவனருமான மிடாஸ் மோகன் இன்று காலமானார்.
சசிகலா, இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம்.. ஜெயலலிதா ஆட்சியின்போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது.

midas factory former md mohan passes away

இதற்கு காரணம், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிலிருந்துதான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.. எல்லா வகையான மதுபானங்களும் இந்த மிடாஸிலிருந்துதான் கொள்முதல் ஆனது.

சென்னை அருகே படப்பையில் இந்த மிடாஸ் மதுபான ஆலை இயங்கி வருகிறது.. இந்த ஆலையை மோகன் என்பவர் நிர்வகித்து வந்தார்.. இந்த ஆலையின் நிர்வாகியாக இருந்ததால் அவர், மிடாஸ் மோகன் என்றும் அழைக்கப்பட்டார்.

அலிகார் பல்கலை.யின் 1,000 மாணவர்கள் மீது வழக்கு.. பல பிரிவுகளில் எப்.ஐ.ஆர்.. உ.பி. போலீஸ் கெடுபிடிஅலிகார் பல்கலை.யின் 1,000 மாணவர்கள் மீது வழக்கு.. பல பிரிவுகளில் எப்.ஐ.ஆர்.. உ.பி. போலீஸ் கெடுபிடி

கடந்த 2012-ல் இவர் மீது பண மோசடி புகார் ஒன்றும் எழுந்தது.. சென்னை மேயர் பதவி வாங்கி தருவதாக கூறி, துளசிராமன் என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டது.. அந்த புகாரும் உறுதியானது. இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள வீட்டில் மோகன் கைதாகி, புழலிலும் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சசிகலா உறவினர் ராவணனுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் நிர்வாக இயக்குனராக இருந்தவரை மிடாஸ் ஆலையில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.. இந்நிலையில் மிடாஸ் மோகன் இன்று காலமானார்.. இவரது மரணம் மன்னார்குடி வட்டாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

English summary
midas factor former managing director mohan passes away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X