சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேள்விக்குறியான சமூக இடைவெளி.. சென்னையில் பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் - வீடியோ

    வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன.

    இதனால் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி கையில் பணமுமின்றி அவதிப்பட்டு வந்தார்கள். இதையடுத்து சிலர் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்வதையும் பார்த்தோம். இன்னும் சிலர் சைக்கிள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

    சிறப்பு ரயில்கள்

    சிறப்பு ரயில்கள்

    இந்த நிலையில் மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக சிறப்பு ரயில்களை இயக்கி சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    போராட்டம்

    போராட்டம்

    கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் சென்னையிலிருந்து எந்த ரயில்களும் இயக்கப்படாததால் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சென்னையில் பல இடங்களில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கோரிக்கை

    கோரிக்கை

    சென்னையை அடுத்த பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஒன்று கூடி வேலையில்லாமல் சாப்பிட்டுக்கே அவதியுற்று வரும் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    போலீஸார்

    போலீஸார்

    இதே போல் வேளச்சேரி, முகப்பேர், கிண்டி ஆகிய பகுதிகளிலும் அவர்கள் போராட்டம் நடத்தினர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் போராட்டம் நடத்துவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Migrant workers in Chennai conducted protest demanding to send them to their native places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X