சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-வது முறையாக தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 உயருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஜுன் 1-ந்தேதி முதல் 2 தனியார் நிறுவனங்கள் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு மொத்தம் 1.5 கோடி லிட்டர் பால் விற்பனை செய்கின்றன. இதில், ஆவின் நிறுவனத்தின் பங்கு நாளொன்றுக்கு வெறும் 30 லட்சம் லிட்டர். ஆனால் தனியார் பால் நிறுவனங்களின் பங்கு நாளொன்றுக்கு, 1.25 கோடி லிட்டர் ஆகும்.

தமிழகத்தில், ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தனியார் பால் விலை

தனியார் பால் விலை

தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37 க்கு விற்கப்படுகிறது.

லிட்டருக்கு ரூ.2 உயர்வு

லிட்டருக்கு ரூ.2 உயர்வு

இந்த நிலையில் ஜுன் 1-ந்தேதி முதல் ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.2 உயருகின்றன. பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் வாகன எரிபொருள், மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவினங்களின் உயர்வின் காரணமாக தற்போது தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

பால் முகவர்கள் சங்கம்

பால் முகவர்கள் சங்கம்

ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரு.54 ஆகவும் உயருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்தாண்டில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

அதிக செலவு

அதிக செலவு

5 ஆண்டுகளாக ஆவின் பால் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. பால் மாடு வளர்ப்பவர்கள் அதிக செலவு காரணமாக அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை குறைந்தது லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

English summary
Private milk prices rising for the 2nd time, rising to Rs.2 per liter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X