சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. சரி வேண்டாம்ணே விட்ருங்க.. அடுத்த வாரம் லீவு விடப்போறீங்களாண்ணே.. என்னத்த!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நேத்துதான ஓய்.. இன்னிக்கு லீவுன்னு சொன்னீரு.. இப்ப என்னத்துக்கு வந்திருக்கீரு.. பாஸ் உங்க மைன்ட் வாய்ஸ் இந்த மன்னாருக்குக் கேக்கத்தான் செய்யுது.. குழம்பு ரெடியாக நேரமாகும் போல.. அதான் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்னு.

ஆமா அமித் ஷா வந்திருக்காரு போல.. வெங்கையா நாயுடுவும் வந்திருக்காக போல.. அட நம்ம ஸ்டார்.. சூப்பர்ஸ்டார்.. ரஜினி சார்.. கூட வந்திருக்கார் போலயே.. வரட்டும் வரட்டும்.. !

ஆஹா.. குக்கரை இறக்கி வச்சுட்டாங்க போல.. நீங்க மொள்ளமா படிச்சிட்டிருங்க.. இப்படி போய்ட்டு அப்படி வந்துர்றேன்...!

ரஜினி - பாஜக - அதிமுக.. உருவாகிறது மாபெரும் கூட்டணி?.. சென்னையில் அமித் ஷா கொடுத்த சிக்னல்! ரஜினி - பாஜக - அதிமுக.. உருவாகிறது மாபெரும் கூட்டணி?.. சென்னையில் அமித் ஷா கொடுத்த சிக்னல்!

அல்வா கொடுத்துடப் போறாங்க

அல்வா கொடுத்துடப் போறாங்க

லோக்சபா தேர்தலில் தமிழக மக்களுக்கு மிட்டாய் கொடுத்து நான் ஏமாற்றிவிட்டேன் என்று புகார் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் தேர்தலில் நான் கம்மர்கட்டு கொடுத்து ஏமாற்றிவிட்டேன்! என்று சொல்வார்: ஸ்டாலின். (மிட்டாயி, கம்மர் கட்டுன்னு தேசிய தேர்தல்ல கொடுத்துட்டு இருக்கீங்க, பார்த்து தல பதிலுக்கு சட்டமன்ற தேர்தல்ல மக்கள் உங்களுக்கு அல்வா கொடுத்துட போறாய்ங்க!)

உங்க கட்சியில் என்ன பெயர்ண்ணே!

உங்க கட்சியில் என்ன பெயர்ண்ணே!

வேலூர் தேர்தலில் தி.மு.க. பணநாயகத்தை நம்பியிருந்தது. அதன்படி வெற்றி பெற்றுள்ளது. இது மோசமான, மோசடியான வெற்றி. தி.மு.க. தேய்பிறையாகவும், எங்கள் கட்சி வளர்பிறையாகவும் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார். (தேய்பிறை, வளர்பிறைன்னு எல்லாமே கெடக்கட்டும்ணே. ஆனா உங்க கட்சியில உங்களை.. சரி வேண்டாம்ணே விட்ருங்க)

அடுத்த வாரம் லீவாண்ணே

அடுத்த வாரம் லீவாண்ணே

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மிகசிறந்த அரசியல் தலைவராக இருக்கிறார். ராகுலும் அவரும் சிறந்த நண்பர்கள். அதன் அடிப்படையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தொடரும்: கே.வி.தங்கபாலு. (இன்று, நாளை, நாளை மறுநாள்னா...அதுக்கு அடுத்த வாரம் லீவு விடப்போறீங்களாண்ணே?)

சொல்லால் அடிச்ச சுந்தரி

சொல்லால் அடிச்ச சுந்தரி

நீலகிரி, கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தங்களால் இயன்ற உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்: விஜயகாந்த். (தலீவரே, உங்க கட்சி ஆளுங்களே கடந்த ரெண்டு மூணு வருஷமா அதிகாரமில்லாம, பதவியில்லாமல், வசூல் இல்லாமல், காசில்லாமல் காய்ஞ்சு போயி கெடக்குறாங்க. பாதிக்கப்பட்ட அவங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லலை, அப்புறம் எப்படி அவிய்ங்க அங்க போயி....என்னத்த)

என்ன வாயர்னு சொல்லுவாங்களோ!

என்ன வாயர்னு சொல்லுவாங்களோ!

எல்லா விஷயத்திலும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் தீர்மானம் இயற்றி, பி.ஜே.பி.யை பகைக்க வேண்டுமாம். ஆனால் இந்த தி.மு.க.வினர் மத்திய அரசோடு சேர்ந்து அமைச்சர்களாகி விடுவார்களாம்! நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (ஓ அப்டி போகுதா ரூட்டு! அது சரி, அம்பூட்டு அமைச்சர்கள் போயி ஒக்காந்தும் வேலூர்ல ஜெயிக்கலையே, ஏ.சி.எஸ். எங்கே ஜெயிச்சுட்டா பி.ஜே.பி. புண்ணியத்துல மத்தியமைச்சராகிடுவார், தனி லாபி பண்ணுவார், ஓவர் ஸீன் போடுவார்ன்னுதானே அவருக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியை உருவாக்குச்சு உங்க டீம்.. சொல்லுங்க பாலாஜிஜி!)

- ஜி.தாமிரா

English summary
mind voice mannaru political leaders talk on various topics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X