சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. ராகுலுக்கு செம தில்லு பாஸ்.. விடுங்கண்ணே நீங்க கூடத்தான் சந்திச்சீங்க!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.. சொல்லிக் கொள்வது உங்களது மனம் கவர்ந்த மைன்ட் வாய்ஸ் மன்னாரு.

நாடு முழுவதும் சுதந்திர தின உற்சாகம் கரை புரண்டோடுகிறது.. என்னதான் சொல்லுங்க.. சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல ஒரு சுகானுபவம் வேற ஏதுமே இல்லைங்க.. நம்ம தாத்தாக்கள், பாட்டிகள் எல்லாம் ரொம்பப் பெரிய நல்லது செஞ்சிருக்காங்க. அதை நாம கெடுக்காம இருந்தாலே போதும்ங்க.

சரி வாங்க நாட்டு நடப்பைப் பார்ப்போம்.. அப்புறம் மறக்காம சிரிச்சுட்டுப் போய்ருங்க.. எதையுமே சீரியஸா எடுத்துக்காதீங்க.

விஜயா ஹேப்பி அண்ணாச்சி.. கோயில் வாசலில் மகன் பிறந்ததால் பூரிப்பு.. அத்தி வரதர் என்றும் பெயர் சூட்டல் விஜயா ஹேப்பி அண்ணாச்சி.. கோயில் வாசலில் மகன் பிறந்ததால் பூரிப்பு.. அத்தி வரதர் என்றும் பெயர் சூட்டல்

செம தில்லு பாஸ்

செம தில்லு பாஸ்

எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலருடன் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு செல்வேன். எங்களுக்கு எந்தவிதமான விமான சேவையும் தேவை இல்லை. ஆனால் சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதி வேண்டும்: ராகுல்காந்தி. (அதெப்படி தல, மோடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட களேபரம் பண்றதுக்கான ஆதாரங்களை திரட்டுறதுக்கான திட்டங்களைப் போடுற அனுமதியை கொஞ்சம் கூட தயங்காம மோடிட்டயே கேட்கறீங்க?)

அது 15 இது 15

அது 15 இது 15

மோடியின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழிற்சாலைகள் மூடல் ஆகியன மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் செயலும், வருமான வரித்துறை வாயிலாக தொல்லை கொடுப்பதும் நடக்கிறது: முதல்வர் நாராயணசாமி. (பதினஞ்சு நாள் பேசாம இருந்த நீங்க, திடீர்ன்னு பதினஞ்சு நாள்ள இப்படி பேசுறீங்கன்னா, பதினஞ்சு நாட்களுக்குள்ளே ஏதோ நடந்திருக்குது. விடுங்க தல, பதினஞ்சு நாள்ள எல்லாமே சரியாகிடும்.)

எல்லாமே உங்களுக்கு சாதகம்தாண்ணே

எல்லாமே உங்களுக்கு சாதகம்தாண்ணே

நீலகிரியில் ஐந்து நாட்களாக கனமழை பெய்து கூடலூர் சட்டசபை தொகுதியே காணாமல் போயிருக்கிறது. பேரழிவு, பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் இதுவரை சென்று பார்க்கவில்லை: மு.க.ஸ்டாலின். (விடுங்க தல, நீங்க ரெண்டு நாளா அங்கே நடந்து, மக்களை சந்திச்சு, நிவாரணம் கொடுத்து, ‘தமிழகத்தின் எந்த மூலையில் மக்களுக்கு பேராபத்து நிகழ்ந்தாலும் நான் அங்கே முதல் ஆளாக நின்று உதவுவேன்.' அப்படின்னு டயலாக்கும் பேசிட்டீங்கள்ள. இதுக்கு மேலே என்ன வேணும். முதல்வர் எடுக்கும் முடிவு உங்களுக்கு நல்லதாவே இருக்குதுன்னு நினைச்சுக்குங்க.)

நீங்க கூடத்தான்

நீங்க கூடத்தான்

மக்களின் குடிதண்ணீர் பிரச்னைக்காக முதல்வரை சந்திக்கலாமென சொன்ன என்னை கே.எஸ்.அழகிரி அன்று தடுத்தார். காரணமாக 'ஸ்டாலின் கோபப்படுவார்' என்றார். ஆனால் இன்று செல்லக்குமார் என்ன ஸ்டாலினின் அனுமதி வாங்கிவிட்டா முதல்வரை சந்தித்தார்?: கராத்தே தியாகராஜன் (விடுங்க தல.. நீங்க கூடதான் அடிக்கடி ரஜினியை சந்திச்சீங்க.. ராகுல் அனுமதி வாங்கிட்டா சந்திச்சீங்க.. எல்லாம் ரைட்டுதான்)

English summary
Here are some of the Political Tit bits from Mind Voice Mannaru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X