சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எங்க பார்த்தாலும் ஒரே மழை.. மெட்ராஸ்ல மட்டும்தான் மூச்சா போற மாதிரியே லைட்டா ரெய்ன்.. என்று அலுத்தவாறே உள்ளே வந்த மைன்ட் வாய்ஸ் மன்னாருவிடம் சூடா வடையைக் கொடுத்து சாப்பிட உபசரித்தோம்.

என்ன ஸொல்லுங்க.. வதைக்கும் தீக்கும் மதைக்கும் ஸெம காம்பினேதன் (அலோ... சாப்பிட்டுட்டு பேசுங்க.. இல்லாட்டி பேசிட்டு சாப்பிடுங்க.. தெறிக்குதுல்ல!) என்று சிலாகித்தபடி ஒரு கடி கடித்தார் வடையை.. அதை விடுங்க, நேத்து செல்லூர் ராஜு என்ன பண்ணார் தெரியுமா என்று ஆரம்பித்த மன்னாருவை நோக்கி நமது காதுகளை ஷார்ப்பாக்கி நகர்ந்தபோது.. இருங்க வடையை சாப்பிட்டுக்கறேன் என்று ஜகா வாங்கினார்.

வடை வாய்க்குள் போய் முடித்ததை (உற்றுப் பார்த்து) உறுதி செய்து கொண்ட நாம், இப்ப சொல்லுங்க.. செல்லூர் ராஜு என்ன பண்ணார்.. அதை விடுங்கப்பா.. ஏதாச்சும் நோட்டீஸ் வந்துரும்.. வேற மேட்டருக்குப் போலாம் வாங்க என்று டிராக் மாற்றி கடுப்பேற்றினார்.

அப்ப பாலு பேசினது

அப்ப பாலு பேசினது

வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது வெற்றியே அல்ல! அப்படின்னு தமிழிசை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் வெற்றி பெற்று, அதன் பின் கருத்து சொன்னால் கூட பரவாயில்லை: கனிமொழி. (விடுங்கக்கா அந்தக்கா ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க. ஆனா, தமிழிசை மேல் இவ்ளோ காண்டு காட்டுற நீங்க, டெல்லியில பி.ஜே.பி.ட்ட ‘நாங்க உங்க இனிய எதிரிகள், நண்பர்கள்'ன்னு டூயட் பாடுற டி.ஆர்.பாலுவை ஏன் கண்டிக்கிறதில்லை?)

அண்ணே அண்ணே திருமா அண்ணே

அண்ணே அண்ணே திருமா அண்ணே

அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது போல வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்திருந்தால் தி.மு.க. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்: திருமாவளவன். (ஹ்ஹா, அண்ணே அப்படியே ‘விடுதலை சிறுத்தைகளை அங்கே சுதந்திரமாகவும், உரிய மரியாதை தந்தும் பிரசாரம் செய்ய அனுமதித்திருந்தாலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பார்கள்'ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்றதையும் வெளியில சொல்லிடுங்கண்ணே)

ஜம்முன்னு இருந்திருக்கலாமே

ஜம்முன்னு இருந்திருக்கலாமே

பா.ஜ.க.வின் இரண்டாவது முறை ஆட்சியில் எல்லாமே அரசியலாக மாறிவிட்டது. நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்கள் உணரவேண்டும். மத்திய அரசின் கொள்கையானது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியிலிருந்து வெற்று அரசியலுக்கு மாறிவிட்டது: மம்தா பானர்ஜி. (தீதி, ராகுலை பிரதமர் வேட்பாளர்ன்னு ஸ்டாலின் சொன்னதும், ஈகோ பார்த்து இம்சை பண்ணாம கம்முன்னு இருந்திருந்தால் இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? அது வெற்று அரசியல்னா, இது வெற்று ஈகோதானே!)

அழகுண்ணே.. அழகிரியண்ணே!

அழகுண்ணே.. அழகிரியண்ணே!

நாங்கள் சரியானவற்றை நிதானமா செய்வோம். பா.ஜ.க.வோ தவறானவற்றை வேகமாக செய்யும். அப்படி தவறை வேகமா செய்றது மூலமாக அக்கட்சி விழ வேண்டிய நேரம் விரைவில் வரும் அப்படிங்கிறதை புரிஞ்சுக்கணும்: கே.எஸ்.அழகிரி. (வாவ்! வாவ்!....நேர்கொண்ட பார்வை படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவே பார்த்துட்டீங்க போல இருக்கே தலைவரே. சரி, தவறு, நிதானம், வேகம்னு வார்த்தைகளை குழப்பிப் போட்டு குத்தி எடுக்குறீங்களே! ஆஸம்ணே!)

- ஜி.தாமிரா

English summary
Political tit bits from Mind Voice Mannaru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X