சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. புதிய நீதிக் கட்சின்னு ஒன்னு இருந்துச்சே.. லீவுல போய்ருச்சா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணே.. என்னண்ணே டீக் கடைக்கு போய் தேடுனா உங்களை ஆளைக் காணோம்.. இங்கே திண்ணையில உக்காந்திருக்கீங்க..

வாங்கடா.. நான் திண்ணையைப் பிடிச்சு நடந்தப்ப என்னையைப் பிடிச்சு நடந்த பயலுகளா... பால் விலை ஏறிருச்சே தெரியாதா உங்களுக்கு. அதனால டீக்கடையிலும் ரேட் ஏறிப் போச்சாம்... சேஞ்ச் கம்மியா இருந்துச்சு.. அதான் போகலை.

கம்மின்னா எவ்வளவுண்ணே.. அட டீக்கடைக்காரர் சொன்ன காசு என் கிட்ட இல்லடா.. ஆளை விடுங்கடா.. ஓ.. கையில சுத்தமா காசே இல்லையா அப்ப.. அத மொதல்லேயே சொல்ல வேண்டியதுதானே!

சென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே சென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே

திடீர் நடுக்கம் ஏன்

திடீர் நடுக்கம் ஏன்

புதுச்சேரி அரசு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானத்தை அதிகமாக ஈட்டி வருகிறது. துணை நிலை ஆளுநர் எங்களின் கைகளை கட்டியிருக்கும் போதே இப்படி சாதிக்கிறோம். எங்கள் கரங்களை விடுவித்துவிட்டால் புதுவை மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவோம்: நாராயணசாமி. (என்ன தல திடீர்ன்னு அதிக வருமானம், சாதனை, கைகளில் கட்டுன்னு என்னென்னவோ சொல்றீங்க? எங்கே காஷ்மீர் மாதிரியே நமக்கும் ஃபியூஸை பிடுங்கிவிட்டுடுவாங்களோன்னு நடுக்கம் வந்துடுச்சா? எதுக்கும் ஒரு பதினஞ்சு நாள் போகட்டும் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு)

லீவுல போய்ருச்சா

லீவுல போய்ருச்சா

வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே உண்மையான வெற்றி. தி.மு.க. தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. 47% ஓட்டுக்களைப் பெற்றி அ.தி.மு.க. தன் ஓட்டு வங்கியை தக்க வைத்துள்ளது: ஏ.சி.சண்முகம். (அண்ணே வேலூர்ல அ.தி.மு.க. கூட்டணியில நீங்கதானே போட்டி போட்டீங்க. அ.தி.மு.க. வெற்றி, அ.தி.மு.க. வாக்கு வங்கியை தக்க வெச்சுதுன்னு பேசுறீங்களே அப்போ, புதிய நீதிக்கட்சின்னு ஒண்ணு இருந்துச்சே அது லீவுக்கு ஊருக்கு போயிடுச்சாண்ணே?)

யாரைச் சொல்றீங்க

யாரைச் சொல்றீங்க

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க வேண்டும்! என முதல்வர் சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகள் இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும்: ஜி.கே.வாசன். (த.மா.கா. தலைவரே....'நிர்வாகிகள் தயாரா இருக்கணும்' அப்படின்னு நீங்க சொன்னது அ.தி.மு.க. நிர்வாகிகளைத்தானே!? ஏன்னா நம்ம கட்சியில அப்படி யாருமே கிடையாதே! அதான் திடீர்ன்னு ஜெர்க் ஆயிடுச்சு)

ஒரே தலைவர் திட்டமா

ஒரே தலைவர் திட்டமா


மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. எல்லாம் சுமூகமாகத்தான் இருக்கிறது, இருக்கும். யாருக்கும் பிரச்னை இல்லை: செல்லூர் ராஜூ (இதுல பிரச்னை இல்லை, சிக்கலில்லை, சுமூகமா இருக்குதுன்னு அழுத்தி அழுத்தி சொல்றீங்களே அண்ணே! இதன் மூலமா நீங்க என்ன சொல்ல வர்றீங்க? ஒரே நாடு திட்டம் போல, உங்க கட்சியிலேயும் ஒரே தலைவர் திட்டத்தை கொண்டு வரணும்னு சொல்றீங்களோ? முன்னாடி ஏற்கனவே ‘விரைவில் ஒரு பெண் இந்த இயக்கத்தை வழிநடத்துவார்'ன்னு வேற சொல்லி இருக்கீங்க.)

- ஜி.தாமிரா

English summary
Political tit bits from Mind voice mannaru and it is just for laugh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X