சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை- அமைச்சர் சி.வி. சண்முகம்

Google Oneindia Tamil News

சென்னை: யாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து முக ஸ்டாலின் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை.

ப.சி.யின் மனுவை தள்ளுபடி செய்க.. சாதகமான உத்தரவு அளித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும்.. சிபிஐ பதில்ப.சி.யின் மனுவை தள்ளுபடி செய்க.. சாதகமான உத்தரவு அளித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும்.. சிபிஐ பதில்

அமைதியான மாநிலம்

அமைதியான மாநிலம்

நாமே அவர்களை நாடிச் சென்று தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லி முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்தியாவில் தமிழகம் போன்ற அமைதியான மாநிலத்தில் தொழில் தொடங்குங்கள் என அழைக்க வேண்டும்.

ஸ்டாலினுக்கு வேலை

ஸ்டாலினுக்கு வேலை

பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கவர செயல்பட்டு வரும் முதல்வரை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. மாறாக பொறாமையால் அவர் மீது குற்றஞ்சாட்டி வருகிறார். யாராவது எழுதி கொடுத்ததை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. விரைவில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

நீலிக்கண்ணீர்

நீலிக்கண்ணீர்

தீர்ப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். இன்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றார் சி.வி. சண்முகம்.

English summary
Minister C.Ve.Shanmugam says that Stalin is reading the script which was written by someone. So no need to answer for his questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X