சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாம்பிள் கலெக்ட் பண்றது ரொம்ப சிம்பிள்.. பாதுகாப்பும் கூட.. சென்னை ஸ்டான்லியில் வந்தாச்சு கியாஸ்க்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா அறிகுறி உள்ளவர்கள், நோய் தொற்று இருக்குமோ என்ற சந்தேகமுடையவர்கள், கொரோனா வந்தவர்கள் உள்ளிட்டோருக்கு ரத்த மாதிரியை முற்றிலும் மூடப்பட்ட கியாஸ்கிற்குள் பாதுகாப்பு சேகரிக்கும் வசதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது. பலியானோர் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது. இந்த நிலையில் தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 பேர் பலியாகிவிட்டனர்.

    தமிழகத்தில் கோவிட் பாதித்தோரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க நிறைய சோதனை மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அது போல் ஏராளமான கருவிகளும் வாங்கப்படுகின்றன.

    இடைவெளி

    இடைவெளி

    தற்போது கோவிட் பாதித்த நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ய RT-PCR முறையில் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் சோதனை முடிவுகள் வர நாள்கணக்காகிறது. அதற்குள் அந்த நபரின் உடல்நிலை மோசமடைகிறது. இதனால் ரேபிட் சோதனை எனப்படும் விரைவு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் என்பதால் நாம் சமூக இடைவெளியை கண்டுபிடித்தாலும் அது பரவாமல் இல்லை.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    ஆம் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த மாதிரி சேகரிப்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலும் சில சமயங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடுகிறது. தமிழகத்தில் 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாதுகாப்பான சேம்பிள்

    பாதுகாப்பான சேம்பிள்

    இந்த நிலையில் ரத்த மாதிரிகளை எடுக்கும் ஆய்வாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஒரு சூப்பரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு சிறிய கவுன்ட்டர் போன்ற கியோஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரத்தம் எடுப்பவர் ஒரு சிறிய கவுன்ட்டருக்குள் முழுவதுமாக அடைக்கப்பட்ட அறையில் இருப்பார்.

    கொரோனா வைரஸ்

    அந்த கவுன்ட்டருக்கு வெளியே ரத்த பரிசோதனைக்காக வந்த நோயாளி உட்கார்ந்திருப்பார். அந்த ஆய்வாளர் அந்த கவுன்ட்டரில் வைக்கப்பட்டுள்ள கையுறை இணைப்பில் கையை விட்டு ரத்தம் எடுப்பார். பின்னர் இந்த கை உறைகள் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யப்படும். இதன் மூலம் கொரோனா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருக்கும். மிகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் ரத்தம் எடுக்கப்படும். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

    English summary
    Minister C.Vijayabaskar says Chennai Stanley Hospital has installed the #WISK, Walk-in simple kiosk for easy & safer sample collection to test #COVID19 without PPE’s. The kiosk is fully sealed and comes with a pair of gloves which will be cleaned with sanitizer after every use.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X