சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவுக்கு இது மோசமான வெற்றி.. 2021 வரை கூட தாக்கு பிடிக்காது.. அவ்வளவுதான்.. ஜெயக்குமார் அதிரடி

வேலூர் தொகுதி வெற்றி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து சொல்லி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    சென்னை: "திமுக பெற்றிருப்பது மோசமான வெற்றி, பழம் நழுவி பாலில் விழும் என்று பார்த்தால் கீழே விழுந்திருச்சு. 2021 தேர்தல் வரை கூட திமுக தாக்குப் பிடிக்காது.. தேறாது" என்று அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் வேலூர் தொகுதி வெற்றி குறித்து கருத்து சொல்லி உள்ளார்.

    காலையில் வாக்கு எண்ண ஆரம்பித்த 3 மணி நேரத்துக்கு ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்தார். அதாவது கதிர்ஆனந்தைவிட சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அப்போது, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக ஜெயித்து விட்டது போல ஒரு பேட்டியும் தந்தார்.

    "திமுகவின் போலி பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொண்டுவிட்டனர். பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்த மக்களின் கருத்தும் மாறிவிட்டது" என்று சொல்லிவிட்டார்.

    மோசமான வெற்றி

    மோசமான வெற்றி

    உடனே அதிமுக தலைமையகத்தில் பட்டாசு வெடித்து, ஸ்வீட் கொடுத்து ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது. இதன்பிறகுதான் தேர்தல் களம் வேறு மாதிரியாக தென்பட ஆரம்பித்தது. இப்போது "மக்கள் இனம் கண்டு கொண்டுவிட்டனர்" என்று ஒரு அமைச்சர் சொல்லி நிலையில், "திமுக பெற்றிருப்பது மோசமான வெற்றி" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    தேறாது

    தேறாது

    இந்த வேலூர் தேர்தல் வெற்றி குறித்து அவர் சொல்லும்போது, "மக்கள் மனதில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக தேய்பிறையாகி விட்டதையே வேலூர் முடிவு காட்டுகிறது. திமுக பெற்றிருப்பது மோசமான வெற்றி. பழம் நழுவி பாலில் விழும் என்று பார்த்தால் கீழே விழுந்திருச்சு. 2021 தேர்தல் வரை கூட திமுக தாக்குப் பிடிக்காது.. தேறாது" என்று சொல்லி உள்ளார்.

    அதிமுக

    அதிமுக

    2021-ல் திமுக தேறாது என்று அமைச்சர் சொன்னாலும், இப்போது அதிமுக ஏன் தோற்றது என்று சொல்லவில்லை. அதே சமயம், மக்கள் மனதில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று எதை வைத்து சொல்கிறார் என்றும் தெரியவில்லை.

    மோசமான வெற்றி?

    மோசமான வெற்றி?

    "வெற்றிகரமான தோல்வி" என்ற தமிழிசை சொன்ன வார்த்தை வார்த்தைக்கு அர்த்தம்கூட புரிந்துவிடும் போல இருக்கிறது... ஆனால் ஜெயக்குமார் சொன்ன "மோசமான வெற்றி" என்பதன் அர்த்தம் என்று என்றுதான் புரியவேயில்லை.

    English summary
    vellore lok sabha election. vote result live update: TN Minister Jayakumar criticized about DMKs victory
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X