சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: பழைய விஷயங்களை பேசுவதால் ரஜினிக்கு என்ன பிஎச்டி பட்டமா கொடுக்க போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    துக்ளக் விழாவில் ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த் தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனை செய்து பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

    துக்ளக் பத்திரிகையில் போட்டதாக கூறிவிட்டு இன்று அவுட் லுக் பத்திரிகையின் ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்தார் ரஜினிகாந்த். மேலும் திராவிடர் கழகத்தினர் கோருவது போல் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.

    கருத்துகள்

    கருத்துகள்

    இதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பாஜக தவிர பெரும்பாலான கட்சிகள் ரஜினிக்கு எதிராக பட்டும் படாமல் தங்கள் கருத்துகளை முன் வைத்த வண்ணம் உள்ளன.

    பழைய விஷயங்கள்

    பழைய விஷயங்கள்

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் மறக்க வேண்டிய சம்பவம் என கூறிவிட்டு மீண்டும் அதை ரஜினி ஞாபகப்படுத்தியுள்ளார். பழைய விஷயங்களை பேசுவதால் ரஜினிக்கு பிஎச்டி பட்டமா கொடுக்க போகிறார்கள்?

    ரஜினிக்கு ஜெயக்குமார் கண்டனம்

    ரஜினிக்கு ஜெயக்குமார் கண்டனம்

    அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என்றார் ஜெயக்குமார். ஆனால் ரஜினி கூறியது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதே கி.வீரமணி, கொளத்தூர் மணி உள்ளிட்டோரின் வாதமாக உள்ளது.

    முற்றுகை

    முற்றுகை

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இதை லேசில் விட மாட்டோம் என்றும் ரஜினி மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 23 ஆம் தேதி ரஜினியின் போயஸ் தோட்டத்தை முற்றுகையிட போவதாகவும் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர்.

    English summary
    Minister Jayakumar says that Why Rajinikanth speaking very old issues?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X