சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே.. அஜீத் இத்தனை பெரிய திறமைசாலியா.. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அஜித்தை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னை: டிரோன் விமானத்தில் ஏறி உட்கார்ந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, நடிகர் அஜித்தை எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.

    எப்பவுமே அமைச்சர் ஜெயக்குமார் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டிருப்பார். திடீரென்று பாடுவார், திடீரென்று கவிதை எழுதுவார், தடாலடியான ஒரு சிங்ககுட்டியை தூக்கி வைத்து கொஞ்சுவார்.. இப்படி பல அம்சங்களை அவ்வப்போது வெளியே தெறிக்கவிடுவார்.

    அதுபோல, ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சியில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பார்வைக்காக இந்த விமானம் வைக்கப்பட்டிருந்தது.

    டிரோன் விமானம்

    டிரோன் விமானம்

    இதை உருவாக்கியது நடிகர் அஜித்தான். இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் மாணவர்களின் நலனுக்காக இந்த டிரோன் விமான வேலையில் இறங்கினார். தக்ஷா என்ற மாணவர் குழுவுடன் இணைந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து இதனை உருவாக்கினார்.

    ஏறி உட்கார்ந்தார்

    ஏறி உட்கார்ந்தார்

    இந்த விமானம்தான் பார்வைக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி உட்கார்ந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டார். பிறகு அந்த விமானத்தை சுற்றுமுற்றும் பார்த்து, விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார்.

    எப்பவுமே பிடிக்கும்

    எப்பவுமே பிடிக்கும்

    அப்போதுதான் அது அஜீத் தயாரித்தது என தெரியவந்தது. 2 நாளைக்கு முன்பு கூட அஜீத்தின் அரசியல் அறிக்கை சம்பந்தமாக "அஜீத் மிகுந்த துணிச்சல் வாய்ந்தவர், தொழில் பக்தி நிறைந்தவர், அவர் வெளிப்படையாக பேசுவது எனக்கு எப்பவுமே பிடிக்கும்" என்று கருத்து சொல்லி இருந்தார் ஜெயக்குமார்.

    இவ்வளவு திறமைசாலியா?

    இவ்வளவு திறமைசாலியா?

    இப்போது அஜித் தயாரித்த விமானத்தை பார்த்ததும் இன்னும் ஆச்சரியப்பட்டார். அஜித் இவ்வளவு திறமைசாலியாக இருக்கிறாரே என்று வியந்து பாராட்டினார்.

    English summary
    Minister Jayakumar Visited the Drone Plane and he praised Actor Ajith's talent.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X