சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூச்சுவிடும் ஒவ்வொரு நொடியும் அன்னையிட்ட பிச்சை.. அமைச்சர் ஜெயக்குமாரின் உருக்கமான வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: மூச்சுவிடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சையல்லவா இந்த உயிர் என அமைச்சர் ஜெயக்குமார் அன்னையர் தின வாழ்த்துகளை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அம்மாவை புகழ்ந்து தள்ளும் கஸ்தூரி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்

    இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தனது அன்னைக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜெயக்குமாரும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    Minister Jayakumar expresses his mothers day wishes

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தனது வீடியோவில் கூறுகையில் வணக்கம் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சையல்லவா இந்த உயிர்!

    ஆம் தனியார் அன்னையை வணங்க ஒரு தினம்
    ஒரு வகையில் அதுவும் நல்லதுதான்
    அன்னை மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா!

    என்னை ஈன்றெடுத்த தெய்வத்தின் பெயர் ஜெயலட்சுமி. அன்பு மொழி மட்டுமே அறிந்தவர். ஆசை மொழி மட்டுமே உதித்தவர். கஷ்டங்கள் பட்டாலும் ஒரு நாளும் வெளிக்காட்டிக் கொள்ள நெஞ்சுரம் கொண்டவர்.

    ஜெயக்குமார் என்ற பெயரிட்டு ஆளாகி அழகு பார்த்த பெற்ற தாய் என் தாய்.

    சவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சிசவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி

    அரசியலில் அடியெடுத்து வைக்க அச்சாரமாக இருந்தவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவரின்றி ஓரணுவும் அசைந்ததில்லை எனக்கு. அவர் சொல்லே வேதம். பார்வையோ அருள்.

    வலிதாங்கி வலிதாங்கி வலிமையான பிறவியை பெற்றெடுத்தவர் அவர். இன்று என் மீது விழும் அடிகளை தாங்கும் வல்லமையை பெற்றுக் கொண்டதும் அவரிடத்தில்தான். பெற்ற அன்னையையும் நாம் வணங்கும் அன்னையையும் இந்த அன்னையர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன்.

    மீண்டும் அன்னையர் தினத்தில் அன்னையர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Jayakumar expresses his mother's day wishes to all the mothers. He recalled memories about Jayalalitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X