சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்டியின் கால் மீது விழுந்த ஸ்பீக்கர்.. பதறியடித்து ஓடி வந்த ஜெயக்குமார்.. கர்சீப் வைத்து கட்டினார்

பிரச்சார கூட்டத்தில் மூதாட்டிக்கு ஏற்பட்ட காயத்துக்கு அமைச்சர் ஜெயக்குமர் முதலுதவி செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாட்டியின் கால் மீது ஒரு ஸ்பீக்கர் திடீரென்று பொத்தென்று வந்து விழவும், அமைச்சர் ஜெயக்குமார் துடிதுடித்து போய் முதலுதவி செய்த சம்பவம் அனைவரையும் உருக்கிவிட்டது!

அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் சூளைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரும் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.

Minister Jayakumar helps to old woman

ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பிரச்சார பேச்சை கேட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஸ்பீக்கர் எதிர்பாராத விதமாக அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பாட்டியின் காலில் பொத்தென்று விழுந்தது.

இதையடுத்து, அந்த பாட்டி வலி தாங்காமல் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாட்டிக்கு என்ன ஆச்சோ என்று பதட்டமடைந்து சூழ்ந்து கொண்டனர். அப்போது, வலியால் துடித்த பாட்டியின் குரலை கேட்டு, பிரச்சார வேனில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் பதறியடித்து வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபரை சிறையில் அடைக்க மறுப்பு.. இப்போ எங்கேயுள்ளார்?எடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபரை சிறையில் அடைக்க மறுப்பு.. இப்போ எங்கேயுள்ளார்?

பாட்டியின் கால் மீது கிடந்த ஸ்பீக்கரை எடுத்து தூரப்போட்டார். உடனடியாக தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து அந்த பாட்டியின் காலில் கட்டிவிட்டார். அங்கிருந்தோரை அழைத்து "ஆஸ்பத்திரிக்கு சீக்கிரமாக கூட்டிட்டு போங்க" என்று உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்.

பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் திடீரென ஓடிவந்து, வலியால் துடித்த பாட்டிக்கு முதலுதவி செய்தது சுற்றியிருந்த பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை தந்தது!

English summary
In Chennai Campaign Minister Jayakumar made the First aid to the Old Woman in the accident
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X