• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீரென வேட்டியை மடிச்சு கட்டி.. நடுத் தெருவில் அமைச்சர் அதகளம்.. ஏன்.. என்னாச்சு!

|

சென்னை: சென்னையில்... நடுத்தெருவில் உட்கார்ந்திருந்த அமைச்சரை பார்த்ததும் சுற்றி நின்றவர்களுக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை.. அப்படி ஒரு ஸ்வீட் ஷாக்கை தந்திருக்கிறார் நம்ம அமைச்சர் ஜெயக்குமார்!

  சிறுவர்களுடன் கேரம் விளையாடும் அமைச்சர் விஜயக்குமார்.. வைரலாகும் வீடியோ

  அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை சீரியஸ் & கலகலப்பு கலந்த மனிதர்.. வெகு ஜோவியல் டைப்.. பழகுவார்.. கேஷூவல் பேச்சு.. கெத்து, பந்தா இவரிடம் கொஞ்சமும் இருக்காது.

  Minister Jayakumar plays carrom with kids in roadside

  அதே சமயம் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் என்றால் சீரியஸ் ஆகிவிடுவார்.. புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்து பாயின்ட் பாயின்ட்டாக பேசுவார்.. இப்போது பரபரப்பான தமிழக அரசியலில் முதல்வருக்கு அடுத்தபடியாக அரசு விவகாரங்கள் குறித்து பேசுவதும், விளக்கம் தருவதும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவதும் எல்லாமே சாட்சாட் ஜெயக்குமார்தான்!

  இவர் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார்.. தீவிரமான கலைப்பிரியரும்கூட... திடீரென மைக் பிடித்து பாடுவார்.. திடீரென்று ஹைக்கூ எழுதுவார்.. கிரிக்கெட் விளையாடுவார்.. சைக்கிளிங் செய்வார்.. ஜிம்னாஸ்டிக் செய்வார்.. வாலிபால் விளையாடுவார்.. டிராயிங் வரைவார்.. அடிக்கடி தன் சின்ன வயசு போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு அனைவரையும் திக்குமுக்காட செய்தும் விடுவார்.

  இப்போதுகூட அப்படிதான் ஒரு காரியத்தை செய்துள்ளார்.. தன்னுடைய ராயபுரம் தொகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு அமைச்சர் சென்று கொண்டிருந்தார்.. அப்போது தெருவோரம் சிறுவர்கள் தரையில் உட்கார்ந்து கேரம்போர்டு விளையாடி கொண்டிருந்தனர்.. அதை பார்த்ததும் ஜெயக்குமாருக்கும் குஷியாகிவிட்டது.. உடனே வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அவரும் விளையாட உட்கார்ந்துவிட்டார்.

  ஒயிட் அண்ட் ஒயிட் டிரஸ்ஸில் அமைச்சர் இப்படி திடுதிப்பென்று வந்து உட்கார்ந்து விளையாட வருவார் என்று அந்த சிறுவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் மட்டுமில்லை, அமைச்சருடன் சென்றிருந்தவர்களும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சின்ன ஸ்டூலில் உட்கார்ந்து கொண்ட அமைச்சர், கேரம்போர்டு காயின்களை அடிக்க ஆரம்பித்தார்.. ஆனால் ஒன்று கூட விழவில்லை.

  எனினும் மனம் தளராத ஜெயக்குமார் தொடர்ந்து விளையாடினார்.. 4 முறை முயற்சித்து, கடைசியாக 5வது முறை அந்த காயின் விழுந்தது.. இதை பார்த்ததும் சிறுவர்களும், பெரியவர்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. அத்துடன் விளையாட்டை முடித்து கொண்ட ஜெயக்குமார், சிறுவர்களிடம் மனம் தளர கூடாது.. விடாமுயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என்று ஒரு பஞ்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

  ஒரு மனிதன் எவ்வளவுதான் உயரத்தில் சென்றாலும், பதவி, பொறுப்புகள் சூழ்ந்தாலும், தன்னிலை மறக்காததும், தன் இயல்பில் இருந்து மாறாததுமே அந்த மனிதனை அடையாளம் காட்டி கொண்டே இருக்கிறது.. அந்த வகையில் ஜெயக்குமாரும் மக்களிடம் நெருங்கியே இருந்து வருவது பாராட்டத்தக்கது!

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Minister Jayakumar plays carrom with kids in roadside
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X