சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் மசோதா.. ஏதோ பேச்சின் ஊடே அப்படி பேசிவிட்டார்.. மத்தபடி முதல்வரின் நிலைப்பாடே இறுதி- அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற வாக்குறுதியை பெற்ற பின்னரே அ.தி.மு.க அம்மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விவசாயிகளின் நலனை அ.தி.மு.க எப்போதும் பாதுகாக்கும். அம்மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை என்ற வாக்குறுதியை பெற்ற பின்னரே அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.

    விவசாயிகளின் முதுகில் குத்தியது தி.மு.க.தான். விவசாயிகளுக்கு தி.மு.க செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

    நல்லது நடக்கும் அன்றே கெட்டதும் நடக்கும்... மோடி பெரியார் பிறப்பு... ராதா ரவி விமர்சனம்!! நல்லது நடக்கும் அன்றே கெட்டதும் நடக்கும்... மோடி பெரியார் பிறப்பு... ராதா ரவி விமர்சனம்!!

    17 ஆண்டுகள்

    17 ஆண்டுகள்

    தி.மு.க தமிழகத்தை ஆண்ட காலம் கருப்பு ஆட்சி காலம். 17 வருடங்கள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க கச்சத்தீவு என்ற நமது அடிப்படை உரிமையை இல்லாமல் செய்துவிட்டது. ஆட்சியில் இருந்தபோது அன்று மக்களுக்கு துரோகம் செய்த தி.மு.க எனும் ஓநாய்கள் இன்று ஆடுகள் போல வந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    திமுக

    திமுக

    அரசியல் செய்பவர்கள் யார் என மக்களுக்குத் தெரியும். ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்ய உரிமையுண்டு. ஆனால் பணம் எந்த இலாக்காவில் வருகிறதோ அந்த இலாக்காவில் தனது குடும்ப உறுப்பினர்களை நியமித்த தி.மு.க வினருக்கு அவ்வாறான தார்மீக உரிமைகள் கிடையாது.

    கட்சியின் நிலைப்பாடு

    கட்சியின் நிலைப்பாடு

    வேளாண் மசோதா விவகாரத்தில் கட்சி நிலைபாடு என்பது முதலமைச்சர் எடுக்கும் முடிவுதான். ராஜ்யசபாவில் அதிமுக எம்பி பாலசுப்பிரமணியன் அந்த மசோதாவுக்கு எதிராக பேசியது ஏதோ பேச்சினூடே அவ்வாறு வந்திருக்கும். மற்றபடி மாற்றி மாற்றி பேசுவது நாங்கள் இல்லை.

    முதல்வர்

    முதல்வர்

    சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கிதான் அ.தி.மு.க வின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கட்சியில் மற்றபடி வேறு எந்த சலசலப்பும் இல்லை. சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவில்லை. அமைச்சர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட பின்னரே அவர் முதலமைச்சர் ஆகியுள்ளார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

    English summary
    CM Edappadi's decision is final one in Agri bills, says Minister Jayakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X